மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆல்-இன்-ஒன் பயன்பாடு இப்போது ஐபாட் இல் அறிமுகம்..
மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆல் இன் ஒன் பயன்பாடு இப்போது ஐபாடில் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் ஆகியவற்றை ஒரே ஆப்ஸ் இன் கீழ் இணைக்கும் இந்த பயன்பாடு முதலில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இது ஐபோன் சாதனங்களிலும் பயன்படுத்த கிடைத்தது.

இப்போது அதற்குப் பிறகு, ஐபாட் சாதனங்களில் வேலை செய்ய இந்த அம்சம் பிரத்தியேகமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஐபாட் சாதனங்களுக்கான புதிய மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாட்டின் வருகையானது, பயனர்கள் இப்போது ரெட்மண்ட் நிறுவனத்திடமிருந்து iPadOS தொகுப்பைப் பெற முடியும், இது வேர்ட் டாக்குமெண்ட், எக்செல் ஸ்ப்ரெட்சீட் மற்றும் பவர்பாயிண்ட் தகவல்களை உருவாக்க மற்றும் திருத்த அனுமதிக்கிறது.
இவை அனைத்தும் ஒரே செயலி மூலம் கிடைக்கிறது என்பதே முக்கியமான விஷயமாகும். பயனர்கள் இந்த ஆப்ஸ்-ஐ நேரடியாக ஐபாட் சாதனங்களின் ஆப் ஸ்டோர் வழியாகப் பதிவிறக்கம் செய்யலாம். இது ஒரு முறை இன்ஸ்டாலேஷன் மூலம் வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் அணுகலைக் கொண்டுவருகிறது. இதன் பொருள் நீங்கள் இனி உங்கள் ஐபாடில் பிரத்யேக வேர்ட், எக்செல் மற்றும் பவர்பாயிண்ட் பயன்பாடுகளை வைத்திருக்க வேண்டியதில்லை.
இருப்பினும், அவை மூன்றையும் நீங்கள் விரும்பவில்லை என்றால் தனித்தனி பயன்பாடுகளையும் பதிவிறக்கம் செய்து உங்களுக்குத் தேவையான பயன்பாடுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. iOS மற்றும் iPadOS சாதனங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்பாடு (பதிப்பு 2.6) PDF களை உருவாக்கிக் கையொப்பமிட உங்களை அனுமதிக்கும். இது உங்கள் படங்களை ஆவணங்களாக மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications