டிப்பன்பாக்ஸ் ஊட்டச்சத்துமிக்கதா? கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்..

|

குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிப்பது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சில வகையான காய்கறிகளை, அதிலும் குறிப்பாக பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை குழந்தைகள் சாப்பிடுவதற்கான தந்திரங்களை கையாளும்போது உண்மையில் பெற்றோருக்கு தலையை சுற்றிவிடும். இருப்பினும் தற்போது இந்த கவலையை போக்கும் வகையில், குழந்தைகளின் டிபன் பாக்ஸில் உள்ள உணவின் ஊட்டச்சத்தை கண்காணிக்க பெற்றோருக்கு உதவுகின்ற செயலியை 7வயது சிறுவன் உருவாக்கியுள்ளான்.

டிப்பன்பாக்ஸ் ஊட்டச்சத்துமிக்கதா? கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்

சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், சில உணவுப் பொருட்கள் எவ்வளவு மோசமான ருசியை கொடுத்தாலும், அவர்களின் வளர்ச்சியடையும் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை எவ்வாறு வழங்கும் என்பதை குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகளை பொறுத்தவரை, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சரியான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது.ஆனால் பல பெற்றோர்கள் இதை உணருவதில்லை. பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் எதை சாப்பிடுவதை விரும்புகிறார்களோ அதை மதிய உணவை டிபன்பாக்ஸில் தருகிறார்களே தவிர,அதில் எந்த வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதை பொருட்படுத்துவதில்லை.

இது உடல் பருமன் பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மட்டுமில்லாமல், பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சித்தாந்த் , குழந்தைகளுக்கு கடுமையான உணவு முறையைப் பின்பற்றும் அம்பிடஸ் வேர்ல்ட் பள்ளியில் படிக்கின்றான். மேலும் இச்சிறுவன், குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே கோடிங் கற்றுக்கொள்ள உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்றவற்றை கற்பிக்கும் வைட்ஹாட் ஜூனியர் என்னும் EDTech ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு அங்கமாக உள்ளான். கோடிங்-ஐ கற்றுக் கொள்ளும்போது, ​​நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் இடைவேளையின் போது சத்தான உணவை உட்கொள்ள உதவுவதற்காக 'டிஃபின் பிளானர்’ என்ற செயலியை இந்த பயிற்சியின் மூலம் உருவாக்கியுள்ளான் இச்சிறுவன். இந்த செயலி குழந்தைகளை மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களையும் ஆரோக்கியமாக சாப்பிட தூண்டுகிறது.


இச்செயலி குழந்தைகளின் டிபன் பாக்ஸில் பேக் செய்யப்பட வேண்டிய ஊட்டச்சத்தின் அளவு பற்றிய தகவல்களையும், ஊட்டச்சத்து உட்கொள்ளலுக்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது.

டிப்பன்பாக்ஸ் ஊட்டச்சத்துமிக்கதா? கண்காணிக்க செயலியை கண்டறிந்த சிறுவன்

வைட்ஹாட் ஜூனியர் நிறுவனத்தின் நிறுவனர் கரண் பஜாஜின் கூறுகையில், “இந்த கால குழந்தைகளுக்கு சரியானது எது, தவறானது எது என்ற உணர்வு மேலோங்யுள்ளதால், அவர்கள் நம் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்கள் பாணியில் பங்களிக்க விரும்புகிறார்கள்.சித்தாந்தை கற்பது போல, 6 வயது குழந்தைகள் முதல் எதிர்காலத்திற்கு தங்களை தயார் செய்துகொள்ள கோடிங்-ஐ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கலாம் பல இளம் குழந்தைகள் உலகில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும், மிகவும் ஆக்கபூர்வமான, உயர் பயன்பாட்டு டிஜிட்டல் செயலிகளை உருவாக்குவதை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம் ." என்கிறார்.

இந்த சுட்டி சிறுவனின் டிஃபின் பிளானர் செயலி கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Meet 7-Year-Old Siddhanth, Who Has Built An App To Track Nutrition Of Tiffin Box : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X