இந்தியா: வானிலை தகவல்களை தெரிந்துகொள்ள Mausam செயலி அறிமுகம்.!

|

உலகளவில் வானிலை சார்ந்த தகவல்களை பெற நிறைய செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக இதுபோன்ற செயலிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் தற்சமயம் ​​இந்திய அரசாங்க அதிகாரிகள் Mausam என்ற புதிய வானிலை செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

வானிலை முன்னறிவிப்புகள்

குறிப்பாக புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த புதிய Mausam செயலியை அறிமுகம் செய்துள்ளார்,இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பிற எச்சரிக்கைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட Mausam செயலி தனித்துவமான மொபைல் செயலிகளில் ஒன்றாகும், இது தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலியை இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மற்றும் செமி-ஆரிட் வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) ஆகியவை இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

பப்ஜிக்கு போட்டியாக மிரட்டலான புதிய மேப் உடன் கால் ஆஃப் டூட்டி மொபைல் அசத்தல்!பப்ஜிக்கு போட்டியாக மிரட்டலான புதிய மேப் உடன் கால் ஆஃப் டூட்டி மொபைல் அசத்தல்!

அதிகரிக்கவும், பழைய

இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் கண்காணிப்பு நெட்வொர்க்குகளை அதிகரிக்கவும், பழைய கப்பல்களை மாற்றவும், புதிய கணினி வளங்களை வாங்கவும் தற்போதைய பட்ஜெட்டை விட இரு மடங்காவது பெரிய நிதி முதலீடுகள் தேவை என்றார்.

வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம்

இந்த Mausam செயலி நகர அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை போன்ற வானிலை தகவல்களை வழங்குகிறது இந்த அட்டாகச செயலி. மேலும் இந்தியாவில் 200நகரங்கள் Mausam செயலியில் உள்ளன, மேலும் அவை ஒரு நாளைக்கு எட்டு முறை புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைகளுக்கு புதுப்பிக்கப்படும்

Mausam செயலி ஆனது சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கைகளுக்கு புதுப்பிக்கப்படும். பின்பு இந்த செயலி பயனர்களுக்கு உள்ளூர் வானிலை மாற்றங்களுக்கான மூன்று மணி நேர எச்சரிக்கை மற்றும் தீவிரம் குறித்த புதுப்பிப்பை வழங்கும். மேலும் 800 வானிலை நிலையங்கள் மற்றும் மாவட்டங்கள் Mausam பயன்பாட்டின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி போலி பொருட்களை சில நொடிகளில் எளிதாக அடையாளம் காணலாம்! எப்படி தெரியுமா?இனி போலி பொருட்களை சில நொடிகளில் எளிதாக அடையாளம் காணலாம்! எப்படி தெரியுமா?

சூழல்களில் வானிலை புதுப்பிப்புகள் வழங்கப்படும், பின்

மேலும் கடலோரப் பகுதியில் ஏற்படும் புயல் போன்ற தகவல்கள், கடுமையான சூழல்களில் வானிலை புதுப்பிப்புகள் வழங்கப்படும், பின்பு அடுத்த ஏழு நாட்களுக்கு தொடர்ந்து உடனடி புதுப்பிப்புகளை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர வானிலை தகவல்களை இ

இந்த Mausam வானிலை செயலியில் ஆபத்தான வானிலைக்கு முன்னதாக மக்களை எச்சரிக்க ஐந்து நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை வண்ண-குறியிடப்பட்ட விழிப்பூட்டல்கள் (சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு) இடம்பெறுகின்றன. பின்பு கடந்த 24மணிநேரவானிலை தகவல்களை இந்த செயலியில் காணலாம். குறிப்பாக இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Mausam Mobile App Launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X