சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே! ஜுக்கர்பெர்க்.!

|

வாட்ஸ்ஆப் பயனர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வாட்ஸ்ஆப் பே அடுத்த 6மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் எனத் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். குறிப்பாக வாட்ஸ்ஆப் பே அம்சம் உலகம் முழுவதும் எப்போது முழுவீச்சில்
அறிமுகப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜுக்கர்பெர்க் கூறியது என்னவென்றால்,

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே!  ஜுக்கர்பெர்க்.!

அடுத்த 6மாங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக இந்த வாட்ஸ்ஆப் பே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப பணபரிவர்த்தனை தொடர்பான தரவுகளை உள்ள நாட்டிலேயே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பணிகளை வாட்ஸ்ஆப் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் கட்டண வணிகத்திற்கான உரிமம் இதுவரை வாட்ஸஆப் பே-க்கு வழங்கப்படவில்லை.

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே!  ஜுக்கர்பெர்க்.!

இந்த வாட்ஸ்ஆப் பே அம்சம் செயல்பாட்டிற்கு வந்தால் நீங்கள் புகைப்படங்களை எளிதாக விரைவாக அனுப்புவது போல பணத்தை அனுப்ப முடியும் என ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரித்து வருவதால், பே அம்சம் நாங்கள் அறிமுகப்படுத்தும்போது
மிக பெரிய வரவேற்பை பெறும் என்று எனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் வாட்ஸ்ஆப் பே அம்சம் ஏற்கனவே பல நாடுகளில் பைலட் மோட் அடிப்படையில் சோதிக்கப்பட்டு வருகிறது. 2018-ல் இந்தியாவில் கூட பரிசோதிக்கப்பட்டது. பின்பு ஒரு மில்லயன் பயனர்களுடன் இந்த சேவையை வெற்றிகரமாக சோதனை செய்த போதிலும், டேட்டாக்களை சேமிப்பது தொடர்பான சிக்கல் மற்றும் விதிமுறைகளை வாட்ஸ்ஆப் பே அறிமுகத்தை இந்தியாவில் தள்ளி போக செய்து வருகின்றன.

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே!  ஜுக்கர்பெர்க்.!

இருந்தபோதிலும் மிகப்பெரிய எண்ணிக்கையில் பயனர்களை கொண்டுள்ள இந்தியாவில் சிக்கல்களை தீர்த்து விரைவில் வாட்ஸ்ஆப் பே அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Mark Zuckerberg says WhatsApp Pay in 6 months : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X