ஓவர்நைட்டில் வைரலாகி சர்ச்சையை கிளப்பும் புதிய ஆப்; அப்படி என்னதான் செய்கிறது.?

Written By:

ஓவராக எடிட் செய்யப்பட்ட நமது புகைப்படத்தை (குறிப்பாக செல்பீக்களை) பார்த்து - "அண்டங்காக்காவிற்கு வெள்ளை பெயின்ட அடிச்ச மாதிரி இருக்கு" என்ற காலாய்ப்பை வாங்காத ஆளே இல்லை எனலாம்.

வைரலாகி சர்ச்சையை கிளப்பும் புதிய ஆப்; அப்படி என்னதான் செய்கிறது.?

நாமெல்லாம் திராவிட இனக்காரர்கள் என்பதால் மாநிறம் நமது மாபெரும் அடையாளம். இருந்தாலும் கூட கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே, அரவிந்த் சாமியை போல, அமலாபாலைப்போல அழகாக - வெள்ளையாக இருக்கவேண்டுமென்ற ஆசை.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நேரில் உருளைக்கிழங்கு, பேஸ்புக்கில் தக்காளிப்பழம்.!

நேரில் உருளைக்கிழங்கு, பேஸ்புக்கில் தக்காளிப்பழம்.!

அந்த ஆசைகளை சமீப கால ஸ்மார்ட்போன்கள் - போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் உதவியுடன் - "சலிக்க சலிக்க" நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. நேரில் பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல இருந்தாலும் கூட பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் புகைப்படங்களில் தக்காளிப்பழம் போல மின்னும் பலரை நம் அறிவோம்.

குழப்பமான எடிட்ங் ஆப்.!

குழப்பமான எடிட்ங் ஆப்.!

அந்த அளவிலான பல போட்டோ எடிட்டிங் மற்றும் பில்டர்ஸ் பயன்பாடுகள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கின்றன. ஆனால் அந்த அனைத்து வகையான ஆப்ஸ்களுமே சமீபத்தில் வெளியிடப்பட்ட மேக் அப் (MakeApp) என்றவொரு ஆப் மூலம் குழம்பிப்போய் உள்ளன. ஏன்.?

நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும்.!

நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும்.!

பொதுவாக ஒரு எடிட்டிங் ஆப் என்றால் அதன் பயன் என்னவாக இருக்கும்.? நமது படங்களுக்கு சற்று கூடுதல் ஒப்பனை சேர்க்க உதவும் அப்டித்தானே.? ஆனால் சமீபத்தில் வெளியான "சர்ச்சைக்குரிய" மேக்ஆப் (​​MakeApp) ஆனது ஒரு நேர் மாறான விளைவுகளை ஏற்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. உண்மையில் அது மிகவும் வேடிக்கையானதாகவே உள்ளது.

"பெண்ணிய பிரளயங்கள்" வெடிக்கும்.!

ஆம். மேக்ஆப் (Makeapp) பயன்பாட்டின் கீழ் உங்கள் படங்களுக்கு தேவையான எடிட்டிங்கை செய்யும் மறுகையில் உங்கள் புகைப்படத்தில் இருந்து ஏற்கனவே இருக்கும் ஒப்பனைகளை அகற்றவும் முடியும். அதாவது உங்களின் மேக்கப்பை கலைக்கும். பெண்கள் மத்தியில் இதுவொரு சர்ச்சைக்குரிய பயன்பாடாக மாறி "பெண்ணிய பிரளயங்கள்" வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முதல் ஐந்து படங்கள் இலவசம்.!

முதல் ஐந்து படங்கள் இலவசம்.!

பெண்கள் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் இதை தற்போதே இந்த ஆப்பின் எதிர்மறை விளைவின் மீதான வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளன என்பதும் இலவசமாக ஐந்து படங்கள் வரை மேக்அப் ரிமூவல் செய்யும் இந்த ஆப் ஆனது அதன் வரம்பற்ற பயன்பாட்டிற்காக 0.99 அமெரிக்க டாலர்களை வசூலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Makeapp is making headlines all over the world. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot