புதிய பழக்கங்களை உருவாக்க அல்லது மாற்ற உதவும் இணையதளங்களும் அப்ளிகேஷன்களும்.!

|

உங்கள் புதிய பழக்கவழக்கங்களை உருவாக்க அல்லது மாற்றியமைக்க உதவும் சில அப்ளிகேஷன்களையும் இணையதளங்களையும் கொண்ட ஒரு பட்டியலை கீழே காண்போம்.

புதிய பழக்கங்களை உருவாக்க அல்லது மாற்ற உதவும் இணையதளங்களும் அப்ளிகேஷன்

புத்தாண்டை முன்னிட்டு நாம் பல புதிய தீர்மானங்களை எடுத்து கொள்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலத்தை கடந்த பிறகு, நாம் தீர்மானித்த இலக்குகளை எட்டிச் சேர முடியாமல் திணறுகிறோம். உங்கள் இலக்குகளை எட்டிச் சேர முடிகிறதா என்பதை அறிய, புதிய பழக்கவழக்கங்கள் உருவாக்க வேண்டும். இதன்மூலம் அவற்றை அடைய எதுவாக அமையும்.

உங்கள் பழக்கவழக்கங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் எண்ணற்ற அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இது போன்ற இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களைக் குறித்து கீழே காண்போம்.

43 திங்ஸ்

43 திங்ஸ்

நீங்கள் அடைய விரும்பும் 43 இலக்குகளை உங்கள் வாழ்க்கையில் உருவாக்க, இந்த இணையதளம் உதவுகிறது. இதில் உங்கள் இலக்குகளை ஒத்த காரியங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் காணப்படும் சில சமூகங்களில் உங்களை இணைந்து கொள்ள முடியும். இலக்குகளை அடைவதில் உங்கள் வளர்ச்சியை குறித்து பகிர்ந்து கொள்ள பிளாக் ஒன்று காணப்படுகிறது. இதற்காக உங்களுக்கு நீங்களே காலகெடுவை உருவாக்கி கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. இது ஒரு சமூக இணையதளத்தைப் போன்று காணப்பட்டாலும், அதை விட சிறப்பாக செயல்படுகிறது.

21 ஹேபிட்ஸ்

21 ஹேபிட்ஸ்

இந்த இணையதளத்தின் மூலம் உங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்து கொள்ள முடியும் என்பதோடு, அடுத்த 21 நாட்களில் அந்த இலக்கை நீங்கள் அடைந்துவிட்டீர்களா என்பதை சோதித்து பார்க்கவும் இந்த இணையதளம் உதவுகிறது. ஒரு பழக்கத்தை உருவாக்க அல்லது திருத்த ஒருவருக்கு 21 நாட்கள் தேவைப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த கருத்தை முன்னிறுத்தி, இந்த இணையதளம் செயல்படுகிறது. இந்த அப்ளிகேஷனை இலவசமாக பயன்படுத்தலாம் என்பதோடு, அந்த முயற்சியில் முழுமையாக இணைந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பிரிமியம் பதிப்பு கூட காணப்படுகிறது.

ஸ்டிக்

ஸ்டிக்

உற்பத்தியியல் உதவியுடன் செயல்படும் இந்த இணையதளம், நீங்கள் சரியான வாழ்க்கை பாதையில் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு அர்ப்பணிப்புடன் கூடிய ஒப்பந்தம் மூலம் உங்கள் இலக்குகளைக் குறித்து தொடர்ந்து கண்காணிக்க முடியும். மேலும், உங்கள் வளர்ச்சியைக் குறித்து சோதித்து அறியும் ஒரு நடுவராக செயல்பட்டு, உங்களுக்கு அறிவிக்கும். இதில் உங்கள் இலக்குகளுக்கு ஆதரவைப் பெறும் வகையில், உங்கள் நண்பர்களையும் சேர்த்து கொள்ளலாம்.

பழக்கங்களை உருவாக்கவும் திருத்தவும் உதவும் அப்ளிகேஷன்கள்

பழக்கங்களை உருவாக்கவும் திருத்தவும் உதவும் அப்ளிகேஷன்கள்

எப்போதும் உங்களோடு ஸ்மார்ட்போனை வைத்திருப்பது வழக்கமாக உள்ளது. எனவே உங்களுக்கு உருவாக்க வேண்டிய மற்றும் திருத்தம் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்களை வழக்கமாக சோதிக்க உதவும் அப்ளிகேஷன்களை அதில் நிறுவி கொள்வது, ஒரு சிறந்த யோசனை ஆகும். உங்கள் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் சிறந்த அப்ளிகேஷன்களை கீழே அளிக்கிறோம்.

1. ஹேபிட் ஸ்ட்ரீக்

1. ஹேபிட் ஸ்ட்ரீக்

இது, உங்களுக்கு இலக்குகளை நிர்ணயித்து கொள்ள அறிவுறுத்தும் ஒரு எளிய அப்ளிகேஷன் ஆகும். பழக்கவழக்கங்களை ஒரு முறை உருவாக்கிவிட்டால், அதை குறித்த பதிவை வழக்கமாக வைத்து கொள்ள முடியும். தினமும் அளிக்கப்படும் பணிகளை வழக்கமாக செய்வதன் மூலம் ஒரு சாதனையை நோக்கி எட்டி சேர முடியும். ஆனால் ஒரு நாள் அதை தவறவிடும் பட்சத்தில், இந்த சாதனை அளவு பூஜ்யத்திற்கு வந்துவிடும். உங்கள் சாதனை பயணத்தை தொடர விரும்பாவிட்டால், அது போன்ற பழக்கவழக்கங்களுடன் உங்களை தொடர்பு ஏற்படுத்தி கொள்ளாமல் விடுவது சிறந்தது.

2. வே ஆஃப் லைஃப் - தனித்தன்மையுள்ள பழக்கங்களை உருவாக்குதல் மற்றும் திருத்துதல்

2. வே ஆஃப் லைஃப் - தனித்தன்மையுள்ள பழக்கங்களை உருவாக்குதல் மற்றும் திருத்துதல்

இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தை உருவாக்குவதில் சிகரத்தை எட்ட முடிகிறது. இது உங்கள் வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த நாட்களுக்கு இடையிலான தொடர்பை கண்டறிய பெரும் உதவியாக இருக்கும். சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலான குறிகள், உங்கள் வளர்ச்சியை விரைவாக அறிந்து கொள்ள உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சியை காட்சியகப்படுகிறது.

3. ப்ரோடெக்டீவ் ஹேபிட்ஸ் & டெய்லி கோல்ஸ் டிராக்கர்

3. ப்ரோடெக்டீவ் ஹேபிட்ஸ் & டெய்லி கோல்ஸ் டிராக்கர்

காலை, மதியம் மற்றும் மாலை என்று காலத்திற்கு ஏற்ப பழக்கங்களை உருவாக்கி கொள்ள, இது ஒரு அட்டகாசமான அப்ளிகேஷன் ஆகும். உங்கள் பழக்கங்களுக்கு அடுத்தப்படியாக உள்ள ஒரு சின்னம், உங்கள் இலக்குகளைக் குறிக்கின்றன. அதற்கு கீழே, உங்களின் வெற்றிகரமான நாட்களின் சாதனைகளை அறியலாம். உங்கள் இலக்குகளை எத்தனை முறை சரியாக பின்பற்றினீர்கள் மற்றும் உங்கள் சிறந்த சாதனைகள் ஆகியவற்றை குறித்த விவரங்களை இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது.

முடிவுரை1

முடிவுரை1

மேற்கண்ட இணையதளங்கள் அல்லது அப்ளிகேஷன்கள் மூலம் உங்கள் பழக்கவழக்கங்களை உருவாக்க, உங்களுக்காக நீங்களே இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றதாக அமையும் இணையதளம் அல்லது அப்ளிகேஷனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

முடிவுரை

முடிவுரை

மேற்கண்ட இணையதளங்கள் அல்லது அப்ளிகேஷன்கள் மூலம் உங்கள் பழக்கவழக்கங்களை உருவாக்க, உங்களுக்காக நீங்களே இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்றதாக அமையும் இணையதளம் அல்லது அப்ளிகேஷனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
We all keep New Year Resolutions, but along with the passage of time, the goals that we set for us become blurred. You can keep track of your goals by creating habits which will help you to achieve them. Numerous apps and sites allow you to make and break habits.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X