மால்வேர்களை கண்டறிய மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலை செய்கிறது

மால்வேர் கண்டறிய மெஷின் லெர்னிங் செய்வது இதை தான்

|

ஆண்ட்ராய்டு தளங்களில் மால்வேர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிய மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்.

மால்வேர்களை கண்டறிய மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு

ஆண்ட்ராய்டு போன்று ஓபன் சோர்ஸ் தளங்களில் அதிகப்படியான பாதுகாப்பு பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் மால்வேர் மற்றும் தீங்கு விளைவிக்கும் செயலிகளை பிளே ஸ்டோரில் கண்டறிய கூகுள் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

பல்வேறு தளங்களும் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை கொண்டு பெரும்பாலான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மெஷின் லெர்னிங்கின் முக்கிய பணி ஒவ்வொரு முறையும் சிறப்பாக பணிகளை மேற்கொள்வது தான்.

கூகுள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்து வருகிறது. பீர் குரூப்பிங் எனும் வழிமுறையை கூகுள் பயன்படுத்தி வருகிறது. பீர் குரூப்பிங் ஒரே மாதிரியான செயலிகளை கண்டறிந்து அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் அம்சங்களை கண்டறியும்.

உதாரணத்திற்கு போட்டோ எடிட்டிங் செயலிகளை கண்டறியும் போது தேவையற்ற அனுமதிகளை கோரும் செயலிகளை தனியே எடுக்கும். இவ்வாறு எடுக்கப்படும் செயலிகளை கவனித்து, அதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

கூகுளின் பாதுகாாப்பு மற்றும் தனியுரிமை பிரிவு நிபுணரான மார்டின் பெலிகன், செயலியின் முக்கிய நோக்கத்திற்கு மாறாக பயனாளிகளின் அனுமதியை கோரும் செயலிகளை கவனித்து வாடிக்கையாளர் தனியுரிமையை பாதிக்கும் சிக்னல்களில் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Google is using machine learning and AI to identify malware and suspicious apps on Play Store by grouping similar kinds of apps and running a check on them

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X