எந்தந்த Realme போன்களுக்கு முதல்ல Android 17 அப்டேட் கிடைக்கும்? GT சீரீஸ் முதல் Narzo சீரீஸ் வரை!
கூகுள் (Google) நிறுவனம் ஆனது ஆண்ட்ராய்டு 17 ஸ்டேபிள் ரிலீஸை (Android 17 stable release) நோக்கி நெருங்கி வரும் நிலையில், ரியல்மி (Realme) உள்ளிட்ட பிற நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் புதிய 'கஸ்டம் ஸ்கின்' (custom skin) வசதியுடன் இதை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன.
ரியல்மி நிறுவனத்தை பொறுத்தவரை, இந்த புதிய ஓஎஸ், ரியல்மி யுஐ 8.0 (Realme UI 8.0) ஸ்கின் உடன் வரவுள்ளது. இது கூகுளின் மேம்பாட்டு குழு (Google development team) வழங்கும் அம்சங்களுடன் கூடுதலாக பல புதிய வசதிகளையும், அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் ரியல்மி ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 8.0 அப்டேட் (Realme UI 8.0 Update) கிடைக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். இது குறித்த தகவலை உங்களுக்கு வழங்கும் வகையில், குறிப்பிட்ட அப்டேட்டை பெற தகுதியுள்ள ரியல்மி போன்களின் பட்டியலை கீழே தொகுத்துள்ளோம்.
ரியல்மி ஜிடி சீரிஸ்:
1. ரியல்மி ஜிடி 8 ப்ரோ
2. ரியல்மி ஜிடி 7
3. ரியல்மி ஜிடி 7 ப்ரோ
4. ரியல்மி ஜிடி 7 ப்ரோ ரேசிங்
5. ரியல்மி ஜிடி 7டி
6. ரியல்மி ஜிடி 6
7. ரியல்மி ஜிடி 6டி
8. ரியல்மி ஜிடி 5 ப்ரோ
ரியல்மி நம்பர் சீரிஸ்:
1. ரியல்மி 16
2. ரியல்மி 16 ப்ரோ
3. ரியல்மி 16 ப்ரோ+
4. ரியல்மி 16டி
5. ரியல்மி 15
6. ரியல்மி 15 ப்ரோ
7. ரியல்மி 15 லைட்
8. ரியல்மி 15டி
9. ரியல்மி 15எக்ஸ்
10. ரியல்மி 14
11. ரியல்மி 14 ப்ரோ
12. ரியல்மி 14 ப்ரோ+
13. ரியல்மி 14டி
ரியல்மி பி சீரிஸ்:
1. ரியல்மி பி4
2. ரியல்மி பி4 ப்ரோ
3. ரியல்மி பி4 லைட்
4. ரியல்மி பி4 லைட் 4ஜி
5. ரியல்மி பி4 பவர் 5ஜி
6. ரியல்மி பி4ஆர்
7. ரியல்மி பி4எக்ஸ்
8. ரியல்மி பி3
9. ரியல்மி பி3 ப்ரோ
10. ரியல்மி பி3 அல்ட்ரா
11. ரியல்மி பி3எக்ஸ்
ரியல்மி சி சீரிஸ்:
1. ரியல்மி சி85
2. ரியல்மி சி85 4ஜி
3. ரியல்மி 85 ப்ரோ
4. ரியல்மி சி83
5. ரியல்மி சி75
6. ரியல்மி சி75எக்ஸ்
7. ரியல்மி சி73
8. ரியல்மி சி71
ரியல்மி நார்சோ சீரிஸ்:
1. ரியல்மி நார்சோ பவர் 5ஜி
2. ரியல்மி நார்சோ 100 லைட்
3. ரியல்மி நார்சோ 90
4. ரியல்மி நார்சோ 90எக்ஸ்
5. ரியல்மி நார்சோ 80 லைட்
6. ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி
7. ரியல்மி நார்சோ 80 ப்ரோ
8. ரியல்மி நார்சோ 80எக்ஸ்
மேலே உள்ள பட்டியலில் உங்கள் ஸ்மாட்போன் இடம்பெற்றிருந்தால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியீடு தொடங்கும்போது அதற்கான ஆண்ட்ராய்டு 17 அப்டேட் கிடைப்பது ஏறக்குறைய உறுதி.ரியல்மி நிறுவனம் அனைத்து டிவைஸ்களுக்கும் ஆன அப்டேட் கொள்கையை இன்னும் அறிவிக்காததால், அதிகாரப்பூர்வ பட்டியல் இதைவிட நீளமாகவே இருக்கக்கூடும். அதாவது மேலே உள்ள பட்டியலில் இல்லாத ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கூட ஆண்ட்ராய்டு 17 அப்டேட்டை பெறலாம் என்று அர்த்தம்.


Click it and Unblock the Notifications