Home
Apps

வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அனுமதிக்கும் லிங்கிடுஇன்.!

ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த வாய்ஸ் மெசேஜிங் வசதி ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் லிங்கிடுஇன் செயலிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

By Vivek Sivanandam

லிங்கிடுஇன் தனது தளத்தின் ஒட்டுமொத்த மெசேஜிங் அனுபவத்தை எளிமையாக்கிய சில நாட்களிலேயே, உங்களின் தொழின்முறை இணைப்புகளுடன் பேசும் வகையில் வாய்ஸ் மெசேஜ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது முதலில் லிங்க்டுஇன் ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்த புதிய அம்சம் உலகம் முழுவதும் கிடைக்கும் என லிங்கிடுஇன் கூறியுள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட முந்தைய அப்டேட்டில் புதிய அட்டேச்மெண்ட் ஐகான், கம்ப்போஸ் பாக்ஸ் நீட்டிக்கும் திறன் மற்றுய் @ஐ பயன்படுத்தி ஒரு நபரை தனிப்பட்ட அல்லது குழு மெசேஜில் கொண்டு வருவது போன்ற வசதிகள் உள்ளன. ஐஓஎஸ் லிங்கிடுஇன் செயலியில் மட்டும் தனியாக நியூஸ் பீடில் உள்ள பதிவுகளை மொழிப்பெயர்ப்பு செய்யும் வசதியும் உள்ளது.

வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

"நீங்கள் நடந்து செல்லும் போதோ அல்லது பல்வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யும் போதோஅல்லது ஆழமான விளக்கம் அளிக்க நேரிடும் போதோ, உங்களின் லிங்கிடுஇன் நண்பருக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்,வாய்ஸ் மெசேஜ் பயன்படுத்தி உங்கள் சொந்த குரலில் எளிதாகவும் விரைவாகவும் உரையாட முடியும்" என்கிறார் லிங்கிடுஇன் நிறுவனத்தின் மூத்த செயல்திட்ட மேலாளர் ஜேக் ஹென்ட்லின்

வாட்ஸ்ஆப், வீசாட்

வாட்ஸ்ஆப், வீசாட்

வாட்ஸ்ஆப், வீசாட் போன்ற உடனடி மெசேஜிங் செயலிகளில் வாய்ஸ் மெசேஜ் வசதி ஏற்கனவே ஒரு அங்கமாக இருந்து, அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரிமாற்றத்திற்கு அதிகளவில் பயன்பட்டு வரும் நிலையில், வாய்ஸ்மெசேஜ் வசதி தொழின்முறை பணியாளர்களுக்கும் எளிதாக இருக்கும் என லிங்கிடுஇன் கருதியது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளம் இதைப்பற்றி கூறுகையில், தனிநபர்கள் தங்களின் சொந்த குரலில் பேசும் போது, சிறப்பாக உரையாட முடிவதுடன்,தனிப்பட்ட முறையில் நல்லுறவை வளர்க்க முடியும் என குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி அழைப்புகள் மேற்கொள்வதை காட்டிலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது சிறந்ததாக இருக்கும் எனவும் அந்நிறுவனம் கூறுகிறது.

வாய்ஸ்மெயிலும் அனுப்பும்

வாய்ஸ்மெயிலும் அனுப்பும்

லிங்கிடுஇன் தளத்தில் வந்துள்ள இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் வசதியை பயன்படுத்தி சில விளம்பர நிறுவனங்கள், மோசடி மெசேஜ்களை போல இனி வாய்ஸ்மெயிலும் அனுப்பும் என பயனர்கள் கருதுகின்றனர். இது எதை குறிக்கிறது என்றால், உங்களுக்கு வரும் அடுத்த வாய்ஸ் மெசேஜ் வேலைவாய்ப்பு விளம்பரமாக இருக்கலாம். ஆனால் இதற்காக வாய்ஸ்மெசேஜ் வசதியை லிங்கிடுஇன் திட்டமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொபைல் செயலிகள்

மொபைல் செயலிகள்

உங்களின் வாய்ஸ் மெசேஜை பதிவு செய்ய, கீபோர்டில் உள்ள மைக்ரோபோன் ஐகானை தொட்டு, பின்னர் வட்டத்தில் உள்ள மைக்ரோபோனை அழுத்தி பிடிக்க வேண்டும். பதிவு செய்து முடித்தவுடன் அழுத்து பிடிப்பதில் இருந்து விரலை எடுத்து விட்டால், வாய்ஸ் மெசேஜ் தானாக உங்களின் லிங்கிடுஇன் இணைப்புகளுக்கு அனுப்பப்படும். பதிவு செய்யும் போது மைக்ரோபோனை அழுத்தி பிடித்த விரலை கீழ்புறம் இழுத்துவிடும் போது, குரல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டு, உங்கள் இணைப்புகளுக்கு அது அனுப்பப்படாது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த வாய்ஸ் மெசேஜிங் வசதி ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் லிங்கிடுஇன் செயலிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வாய்ஸ்மெசேஜ்களை மொபைல் செயலிகள் மற்றும் இணையதளத்திலும் பெற முடியும். வரும் வாரங்களில இந்த வசதி உலகம் முழுக்க அனைத்து தளங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
LinkedIn Now Lets You Send Voice Messages: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X