Subscribe to Gizbot

பெண்கள் ஸ்பெஷல் : பயன்தரும் அற்புத ஆப்ஸ்.!!

Written By: Aruna Saravanan

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் உற்ற நண்பனாகவும், சிறந்த கைடாகவும் இருக்கின்றது. நம்மில் பலர் பல மணி நேரங்களை ஸ்மார்ட் போனில்தான் செலவு செய்கின்றோம். இதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள பல ஆப்கள் உள்ளன. அதுவும் பெண்களுக்கு ஏற்ற ஆப்கள் நிறையவே இருக்கின்றன. பெண்களின் ஆரோக்கியம், உணவு, வீட்டு பொருட்கள் என தேவையான அனைத்துக்கும் ஆப்கள் வந்துள்ளன. அவற்றில் சில உங்களுக்காக.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரைட்சேஃப்

ரைட்சேஃப்

இது பெண்களுக்கான மிக முக்கியமான ஆப். பெண்கள் பயணத்தின் போது சந்திக்கும் பல பிரச்சனைகளை பார்த்துள்ளோம். அதில் இருந்து அவர்களை காத்து கொள்ள இந்த ஆப் உதவி புரியும். இதை உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளவும். பின்பு நீங்கள் பயணம் செய்யும் பொழுது உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை டிராக் செய்யும்படி இதில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். பின்பு நீங்கள் செல்லும் இடம் மற்றும் டிரைவர் வேறு இடத்திற்கு கூட்டி செல்ல முற்பட்டாலும் அவர்கள் அறிந்து உங்களை உடனே காப்பாற்ற முடியும்.

எவர் நோட்

எவர் நோட்

உங்கள் அன்றாட அலுவல்களை மனதில் வைத்து பார்த்து பார்த்து செய்யும் வேலை உங்களுக்குதான். அப்படி இருக்கும் பொழுது சில நேரங்களில் பலவற்றை மறந்து விடுவீர்கள். அதற்கான ஆப்தான் இந்த எவர்நோட். இதில் நீங்கள் பதிவு செய்து விட்டால் போதும் இது உங்கள் அலுவல்களை உங்களுக்கு நினைவூட்டும்.

பீரியட் டிராக்கர்

பீரியட் டிராக்கர்

உங்களை சந்திக்க நண்பர்கள் மாதம் மாதம் வர நேரிடலாம். அந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு மிக பெரிய பிரச்சனை பீரியட்ஸ். அதற்கு தான் பீரியட் டிராக்கர் ஆப் உள்ளது. இது உங்களது கடைசி மூன்று மாத பீரியட்ஸை கணக்கெடுத்து இந்த மாதம் எந்த நாட்கள் நீங்கள் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றது. இதனால் நீங்கள் முன்கூட்டியே திட்டம் தீட்டி தயாராக இருக்கலாம்.

மை பில்

மை பில்

நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது உங்களுக்கு தேவையான பில்ஸை எடுத்து செல்ல மறந்துவிடுகின்றீர்களா. கவலை வேண்டாம். மை பில் ஆப் உங்களுக்கு உதவி புரியும். இது உங்களது மருந்தை நினைவுபடுத்தும்.

பிக் பேஸ்கெட்

பிக் பேஸ்கெட்

பெண்களுக்கு மிக பெரிய பிரச்சனையே காய் கறிகள் வாங்குவதுதான். வேலைக்கு செல்லும் பெண்களாக இந்ருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் வீட்டிற்கு தேவையான காய்கறி மற்றும் பழ வகைகளை வாங்குவதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஆப் தான் இந்த பிக் பேஸ்கெட். இதை சோதனை செய்தாயிற்று. நல்ல பலன் என்று அனைவரும் ஒத்து கொண்டுள்ளனர். இந்த ஆப்பை பயன்படுத்தி அலைந்து திரியாமல் இருந்த இடத்திலேயே காய்கறி மற்றும் பழங்களை வாங்க முடியும்.

புக் மை ஷோ

புக் மை ஷோ

உங்களுக்கு திரைப்படங்கள் பார்ப்பதிலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் மிகுதியாக இருக்கின்றதா. கவலையை விடுங்கள் உங்களுக்கு உதவ வந்துள்ளது புக் மை ஷோ. இந்த ஆப்பின் மூலம் சமீபத்திய திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவற்றை உங்களுக்கு நினைவு படுத்தும். பின்பு என்ன பொழுதுபோக்கு நேரத்தை ஜாலியாக செலவிட வேண்டியது தான்.

ரோப்போஸோ

ரோப்போஸோ

பெண்கள் என்றாலே ஃபேஷன் தான். ஃபேஷன் மீது அதிக பற்று இருப்பவர்களுக்கான ஆப் இது தான். இதன் மூலம் சமீபத்திய டிரெண்ட் மற்றும் ஃபேஷன் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்ய முடியும். சமூக நெட்வர்க்கில் இணைந்து உங்கள் டிரண்டை ஷேர் செய்து அதற்கான கருத்தை பெற்று கொள்ளுங்கள்.

யம்லி ரெஸிபீஸ் மற்றும் ஷாப்பிங் லிஸ்ட்

ஷாப்பிங் லிஸ்ட்

உணவு பிரியர்களுக்கான ஆப்தான் இது. ஒரே உணவை சமைத்து சமைத்து வீட்டில் உள்ளவர்களை போர் அடித்து விட்டீர்களா. கவலை வேண்டாம். இந்த ஆப்பின் மூலம் எண்ணற்ற ரெஸிப்பீக்களை எடுத்து ஜமாயுங்கள். இதில் சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளும் உண்டு.

டாய்லெட் ஃபைண்டர்

டாய்லெட் ஃபைண்டர்

இது பெண்களுக்கு மிக மிக முக்கியமான ஆப். வெளி இடங்களில் அவசரமாக டாய்லெட் போக வேண்டும் என்றால் இங்கும் அங்கும் அலைய வேண்டாம். இந்த ஆப்பின் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பொது கழிப்பிடங்களின் பட்டியல் உங்களுக்கு கிடைக்கும்.

ஹெல்த்திஃபை மீ

ஹெல்த்திஃபை மீ

பெண்களின் ஆரோக்கியத்திற்கான ஆப் இது. நீங்கள் உண்ணும் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை டிராக் செய்யும் ஆப் இது. இது இன்று நீங்கள் எவ்வளவு கேலரீஸ் எடுத்து கொண்டீர்கள் மற்றும் நீங்கள் மாற்ற வேண்டிய உணவு முறை போன்றவற்றை உங்களுக்கு எடுத்து கூறும். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.??

'யாருக்கு வேண்டுமானாலும்' மெசேஜ் அனுப்ப உதவும் 10 சாட் ஆப்ஸ்..!

டேட்டா இல்லாமல் எதுவும் செய்யலாம்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Ladies Only Apps to manage personal, professional life on your phone Tamil

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot