அடடே! வாட்ஸ்அப் இல் இப்படி ஒரு சேவையா? இது தெரிந்தால் வங்கிக்கே போக வேண்டியது இல்லையே!

|

வாட்ஸ்அப் பயன்பாட்டை ஒரு நாளுக்குக் குறைந்தது ஒரு 10 முறையாவது நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறோம். இவற்றைத் தவிர்த்துப் பல பயனுள்ள விஷயங்களையும் நாம் வாட்ஸ்அப் மூலம் செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. வாட்ஸ்அப் மூலம் நாம் எப்படி பேங்கிங் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பேங்கிங் வசதி

வாட்ஸ்அப் பேங்கிங் வசதி

நாள் முழுக்க வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாய் இருக்கும். குறிப்பாக இந்த ஊரடங்கு நாட்களில் வங்கிக்கு நேரில் சென்று உங்களுடைய சந்தேகங்களைக் கேட்கத் தயங்குபவர்களுக்கு இந்த வாட்ஸ்அப் பேங்கிங் வசதி நிச்சயம் ஒரு பயனுள்ள சேவையாக இருக்கும். இந்த வாட்ஸ்அப் சேவையை எப்படி உங்கள் வங்கிகளுடன் இணைந்து பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டணமின்றி இலவச சேவையா?

கட்டணமின்றி இலவச சேவையா?

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோட்டக் மகேந்திரா வங்கி போன்ற பல தனியார் வணிக வங்கிகள் வாட்ஸ்அப் உடன் இணைந்து, இந்த வங்கி சேவையை வழங்கி வருகிறது. இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையின் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் நிகழ் நேரச் சேவைகளை எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகப் பயன்படுத்த வாட்ஸ்அப் அனுமதி வழங்குகிறது.

ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?ஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா? விலை எவ்வளவு தெரியுமா?

வாட்ஸ்அப் வங்கி வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் வங்கி வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் இந்த சேவையை துவங்க உங்கள் வங்கிகளுடைய வாட்ஸ்அப் சேவை எண்களை நீங்கள் காண்டாக்ட்டில் சேவ் செய்ய வேண்டும்.
  • உங்களுடைய வாட்ஸ்அப் வங்கி சேவையை துவங்க சேவ் செய்த எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
  • மிஸ்டு கால் செய்த பிறகு உங்களுடைய எண்ணிற்கு வாட்ஸ்அப் வங்கி சேவைக்கான மெசேஜ்ஜை பெறுவீர்கள்.
  • உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

    உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

    • உங்களுடைய வாட்ஸ்அப் காண்டாக்ட் ஓபன் செய்து, சேவ் செய்த எண்ணிற்கு Hi என்று டைப் செய்து அனுப்புங்கள்.
    • இப்பொழுது வாட்ஸ்அப் சேவையின் கீழ் கிடைக்கும் அனைத்து விதமான சேவை பட்டியலும் உங்களுக்கு அனுப்பப்படும்.
    • இதிலிருந்து உங்கள் தேவைக்கு ஏற்ப சேவையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
    • அடுத்த ஊரடங்கிற்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க! இல்லைனா WFH பண்றவங்களுக்கு வெட்டி செலவு தான்!அடுத்த ஊரடங்கிற்கு முன் உஷாரா இதை செஞ்சிருங்க! இல்லைனா WFH பண்றவங்களுக்கு வெட்டி செலவு தான்!

      வங்கி வாட்ஸ்அப் எண்கள்

      வங்கி வாட்ஸ்அப் எண்கள்

      எந்தெந்த வங்கிக்கு என்னென்ன வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்ய வேண்டும்?

      • ஐசிஐசிஐ வங்கி - 8640086400 என்ற எண்ணை சேவ் செய்யுங்கள்.
      • எச்.டி.எஃப்.சி வங்கி - 70659 70659 என்ற எண்ணை சேவ் செய்யுங்கள்.
      • கோட்டக் மகேந்திரா வங்கி - 9718566655, 022 6600 6022 என்ற எண்ணை சேவ் செய்யுங்கள்.
      • கூடுதல் விபரம்

        கூடுதல் விபரம்

        இந்த எங்களுக்கு முதலில் ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும். பிறகு வாட்ஸ்அப் சாட் ஓபன் செய்து, வங்கி சேவையைத் துவங்க hi என்று அனுப்பவும். கோட்டக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் ‘help' என்ற செய்தியை அனுப்பவும். குறிப்பிட்ட வங்கி சேவைக்கு நேராக இருக்கும் எண்களை டைப் செய்து அனுப்பினால் அது தொடர்பான கூடுதல் விபரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும். இப்படி வாட்ஸ்அப் வங்கி சேவையை நீங்களும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Kotak Mahindra Bank, ICICI Bank, HDFC Bank Offers WhatsApp Banking Service To Their Customers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X