Home
Apps

ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் மையம் விசில் ஆப்.!

மேலும் நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’. என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

By Prakash S

கமல்ஹாசன் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார், அதன்படி ஊழலுக்கு எதிராக மக்களின் செயல்பாட்டிற்கு மய்யம் விசில் ஆப் ஒன்றை அவர் தற்சமயம் அறிமுகம் செய்துவைத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து துவங்கினார். அதன்பின்பு மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் அவர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் மையம் விசில் ஆப்.!

பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமனியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் மய்யம் விசில் ஆப். குறிப்பாக தங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், அபாயச் சங்கு எனும் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் 'விசில் ஆப்'. என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் மையம் விசில் ஆப்.!

ஊழலுக்கு எதிரான இந்த 'மைய்யம் விசில்' செயலியை நேற்று மாலை 5 மணிக்கு அறிமுகம் செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மய்யம் விசில் செயலியை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தது என்னவென்றால் மய்யம் விசில் செயலி என்பது பிரச்னைகளை ஒரே நொடியில் சரிசெய்யும்மந்திரக்கோல் அல்ல, இந்த செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகும் இருக்கும் என்று தெரிவத்தார்.

ஊழலுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் மையம் விசில் ஆப்.!

'மய்யம் விசில் ஆப்'-பை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இதனை எங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குள் இருந்தால் மட்டுமே புகார்களை தெரியப்படுத்த முடியும்.

இந்த செயலியில் ஊழல் பிரச்சினை மற்றும் அவசர பிரச்சினைகளுக்கு என சிறப்பு பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழல் பிரச்சினைக்கான பொத்தானை தேர்வு செய்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Kamal Haasan launches Maiam Whistle app; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X