சித்திரை திருவிழா 2022: கள்ளழகர் இப்போ எங்கே இருக்கிறார்?- காவல்துறை அறிமுகம் செய்த அட்டகாச வசதி!

|

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கோவில் நகரமான மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவானது மதுரை மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். உலகப் புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் செய்து மீனாட்சி சுந்தரேஷ்வரர் மாசி சுத்தி வரும் வைபோகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 14 (இன்று) திருக்கல்யாணம் நடைபெற்றது.

வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்

வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்

அதேபோல் சித்திரை திருவிழாவில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மதுரையில் கள்ளழகர் பல்வேறு வாகனங்களில் அமர்ந்தபடி காட்சியளிப்பார். தங்கக் குதிரையில் அமர்ந்து வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடைபெற இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சித்திரை திருவிழா

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சித்திரை திருவிழா

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெறும் காரணத்தால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவைசுமூகமாக நடத்த மேயர் வி.இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு அருகலிலுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார், தொடர்ந்து கூட்டத்தை நிர்வகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிரஸர் பம்பை பயன்படுத்த வேண்டாம்

பிரஸர் பம்பை பயன்படுத்த வேண்டாம்

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது காலங்காலமாக பக்தர்கள் விசிறி வீசியும், கள்ளழகரை போல் வேடமணிந்து தண்ணீர் பீச்சியும், திரி எடுத்தும், சக்கரை தீபம் ஏற்றியும் வரவேற்று வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இதில் தண்ணீர் பீச்சும் வேண்டுதலின் தவறான வழிமுறைகள் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகருடன் தங்கக்குதிரையில் வரும் பாலாஜி பட்டர் தெரிவித்தார். பக்தர்கள் தொழில்நுட்ப முறையிலான பிரஸர் பம்பை பயன்படுத்தாமல் துருத்தி பையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

"டிராக் அழகர்" என்ற வசதி

கள்ளழகர் கோவிலில் இருந்து ஏப்ரல் 14 (இன்று) மாலை சுமார் 6:30 மணியளவில் புறப்படும் கள்ளழகர் சுமார் 456 மண்டகப்படியில் எழுந்தருளி மதுரைக்கு வருகிறார். இதன் காரணமாக கள்ளழகரை தரிசிக்க செய்யும் பக்தர்களால் அவர் எங்கே இருக்கிறார் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. இதையடுத்து கள்ளழகர் இருக்கும் இடத்தை மக்கள் சிரமமின்றி கண்டறிய "டிராக் அழகர்" என்ற வசதியை மதுரை மாவட்ட காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலி மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மதுரை காவலன் ஆப் செயல்பாட்டில் இருக்கும்

மதுரை காவலன் ஆப் செயல்பாட்டில் இருக்கும்

இதுகுறித்து மதுரை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அளித்த பேட்டியில், முன்னதாகவே மதுரை மாவட்ட காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட "மதுரை காவலன் ஆப்" செயல்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் இச்செயலியில் டிராக் அழகர் என்ற வசதி கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வசதியின் மூலம் ஏப்ரல் 14 (இன்று) முதல் அழகர் எங்கே இருக்கிறார் என்பதை துல்லியமாக அறிய முடியும். கள்ளழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பும் வரை இந்த வசதி செயலில் இருக்கும். கள்ளழகர் ஒரு இடத்தில் இருந்து அடுத்த எந்த வழித்தடம் மூலமாக செல்கிறார் என்பதை இதன்மூலம் மக்கள் கண்டறிய முடியும் என கூறினார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து மூலமாக கள்ளழகர் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம், கள்ளழகர் இருக்கும் இடம் குறித்த விவரம் 10 விநாடிகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்து கொண்டே இருக்கப்படும். இந்த வசதியின் மூலமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினரும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மக்கள் கூடும் பகுதியில் கண்காணிப்பு டவர்களும் அமைக்கப்பட இருக்கிறது. காவல்துறையினரின் "டிராக் அழகர்" வசதியானது 2ஜி வேகத்திலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Kallazhagar Festival: Police Department introduced "Track Alagar" feature on Madurai Kavalan App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X