ஜியோ டிவி - ஏர்டெல் டிவி: இதில் சிறந்த லைவ் டிவி அப்ளிகேஷன் எது?

உங்கள் ஸ்மார்ட்போனில் இவ்விரண்டு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி பார்க்கும் போது, ஜியோ டிவி பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. ஜியோ டிவியின் முகப்பு திரையில் எல்லா சேனல்களையும் காண முடிகிறது.

|

ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவி ஆகிய இரண்டும், உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் நேரடி டிவி சேனல்களைப் பார்க்க உதவுகின்றன. அதே நேரத்தில், இதில் ஒரு அப்ளிகேஷன் மற்றொன்றை விட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்குகின்றன.

நம் நாட்டில் 4ஜி சேவை வந்த பிறகு, ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்துவிட்டது. அந்த வகையில், ஒரு தொலைக்காட்சி பெட்டி இல்லாமலே திரைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஆன்லைனில் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து பேசும் போது, நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியவை என்றாலும், இந்தக் கட்டுரையில் ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவைக் குறித்து காண உள்ளோம்.

 அப்ளிகேஷன்கள்

அப்ளிகேஷன்கள்

இவ்விரண்டில் ஏர்டெல் பயனர்களை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சலுகையின் மூலம் ஏர்டெல் டிவி இலவசமாக வழங்கப்படுகிறது.ஆனால் ஜியோ நிறுவனம், தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஜியோ டிவி வசதியை அளிக்கிறது. ஆயினும் மேற்கண்ட ஏதாவது ஒன்றை எண்ணற்ற பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு அப்ளிகேஷன்கள் தொடர்பான அம்சங்களை இந்தக் கட்டுரையில் ஒப்பிடஉள்ளோம்.

ஜியோ

ஜியோ

ஆன்லைன் நேரடி டிவி அப்ளிகேஷன்களில் எத்தனை சேனல்கள் அளிக்கப்படுகின்றன என்பது கவனிக்க வேண்டிய ஒரு அடிப்படை காரியமாகும். ஜியோடிவியில் 500-க்கும் மேற்பட்ட சேனல்கள் காட்டப்படுகின்றன. இதில் குறிப்பாக ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், குஜராத்தி,மராத்தி, கன்னடா மற்றும் உருது உள்ளிட்ட பல முன்னணி மொழிகளைச் சார்ந்த 585 சேனல்கள் காட்டப்படுகின்றன. இது தவிர, ஜியோ நிறுவனத்திற்கேஉரிய சேனல்களான ஜியோ ஸ்போர்ட்ஸ், ஜியோ தன் தானா தன் மற்றும் ஜியோ இவென்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

  ஏர்டெல்

ஏர்டெல்

மற்றொருபுறம் ஏர்டெல் தளத்தில் 354 சேனல்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன என்பதோடு அதன் அப்ளிகேஷனுக்கு சொந்தமாக சேனல்கள் என்று எதுவும்இல்லை. மேலும் ஏர்டெல் டிவியில் ஹெச்டி அலைவரிசையில் 36 சேனல்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. ஆனால் ஜியோ டிவியில் 115 ஹெச்டி சேனல்கள் அளிக்கப்படுகின்றன. நாம் வழக்கமாக டிடிஹெச் அல்லது கேபிள் இணைப்பு மூலம் பெறும் முன்னணி சேனல்களை ஜியோ டிவி அளிக்கிறது. ஆனால் ஏர்டெல் டிவியில் கலர்ஸ்
சேனல்கள் மற்றும் சில ஆங்கில மூவீஸ் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள்அளிக்கப்படுவதில்லை.

பயன்படுத்துவதில் எளிய தன்மை

பயன்படுத்துவதில் எளிய தன்மை

உங்கள் ஸ்மார்ட்போனில் இவ்விரண்டு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி பார்க்கும் போது, ஜியோ டிவி பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. ஜியோ டிவியின் முகப்பு திரையில் எல்லா சேனல்களையும் காண முடிகிறது. அதிலிருந்து ஹெச்டி சேனல், சாதாரண சேனல், மொழி, விளையாட்டு, பொழுதுபோக்கு, இசை, செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் சேனல்களைப் பிரிக்க முடியும். உங்களுக்கு பிடித்த ஒரு சேனலை தனியாக இதய வடிவிலான ஐகானைக் கொண்டு முதலில் வைத்து கொள்ள முடியும். மேலும் சேனல்களைக் காண செங்குத்தாகவும், அதிலுள்ள நிகழ்ச்சிகளைக் காண கிடைமட்டமாகவும் நகர்த்தலாம். குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பிறகு பார்க்கும் வகையில், பதிவு பொத்தானைப் பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஒரு வாரம் முன் வரை ஒளிபரப்பான நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம்.

 மூவீஸ்

மூவீஸ்

ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. மூவீஸ், விஓடி உள்ளடக்கம் மற்றும் நேரடி டிவி டேப் ஆகியவற்றை வலது முனையில்காணலாம். நேரடி டிவி டேப் உள்ளே நுழைந்தவுடன் மேலே இரண்டு வரிசைகளில் சேனல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றில், தேதி, ஹெச்டி, அனைத்தும் (ஹெச்டி இல்லாதது மற்றும் ஹெச்), மொழி மற்றும் பிரிவுகள் ஆகியவை உள்ளன. இரண்டாவது வரிசையில், நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்குத்தாக உருட்டுவதன் மூலம் சேனல்களை நேரத்திற்கு ஏற்ப காண முடியும். இடது மற்றும் வலது பக்கத்திற்கு உருட்டுவதன் மூலம் நேரத்திற்கு ஏற்ப
பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் காணலாம். இடைமுகத்தை பொறுத்த வரை, இவ்விரண்டு அப்ளிகேஷன்களும் வெற்றியாளர்கள் என்று தான் கூற முடியும். எல்லா உள்ளடக்கங்களையும் ஆராய்ந்து பார்ப்பது ஒரு பெரிய விஷயமாக உங்களுக்கு தெரியவில்லை எனில், ஏர்டெல் டிவி சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில், நேரடி டிவி சேனல்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு அப்ளிகேஷனை நீங்கள் திறக்கும் பட்சத்தில், ஜியோ டிவியைத் தேர்ந்தெடுப்பதுநல்லது.

 டேட்டா உபயோகம்

டேட்டா உபயோகம்

டேட்டாவை அளவாக பயன்படுத்துவோருக்கு, இந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவதால் எவ்வளவு டேட்டா கரையும் என்ற பயம் காணப்படுகிறது.
முதலாவதாக, ஜியோ டிவியை ஒருவர் பயன்படுத்த வேண்டுமானால், ஃபோனில் ஜியோ சிம் பயன்படுத்த வேண்டும் அல்லது வைஃபை இணைப்பு உடன் உள்நுழைவு தகவல்களை (பயனர் பெயர், கடவுசொல்) அளித்து அல்லது இரண்டையும் சேர்த்து அளிக்க வேண்டும். ஆனால் ஏர்டெல் டிவியை இயக்க, சிம் கார்டு அல்லது வைஃபை நெட்வர்க் மூலம் கிடைக்கும் எந்தொரு டேட்டா இணைப்பையும் பயன்படுத்தலாம். அதற்கு உங்கள் ஏர்டெல் எண் மூலம் இந்த
அப்ளிகேஷனுக்குள் உள்நுழைந்தால் போதுமானது.

10 - 12 நிமிடங்கள்

10 - 12 நிமிடங்கள்

டேட்டா உபயோகத்தைப் பொறுத்த வரை, ஜியோ டிவியில் டேட்டா உபயோகத்தைக் குறைக்கும் வகையில், வீடியோ தரத்தை விருப்பத்திற்கு ஏற்ப
மாற்றியமைக்கக் கூடிய ஒரு தனி அமைப்பு கிடையாது. ஆயினும், முழு திரையில் ஒரு நிகழ்ச்சியைக் காணும் போது, வீடியோவின் தர அமைப்பை
மாற்ற முடியும். இந்த வகையில், ஜியோ டிவியில் ஹெச்டி உள்ளடக்கத்தை இயக்கி, 10 - 12 நிமிடங்கள் பார்த்தால் ஏறக்குறைய 300எம்பி டேட்டா வரை
செலவாகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 350எம்பி டேட்டா

350எம்பி டேட்டா

ஏர்டெல் டிவியைப் பொறுத்த வரை, ஹெச்டி உள்ளடக்கத்தை 10 நிமிடங்களுக்கு பார்த்தால், ஏறக்குறைய 350எம்பி டேட்டா செலவாகும். ஆனால் ஏர்டெல் டிவி அப்ளிகேஷனில் வீடியோ தர அமைப்புகளை மாற்றியமைத்து, டேட்டா செலவைக் குறைக்கலாம். எல்லா நிகழ்ச்சிகளையும் உயர்ந்த, நடுத்தர மற்றும் குறைந்த என்ற மூன்று முறைகளில் மாற்றி அமைக்கலாம். வீடியோ தரத்தில் உயர்ந்ததாக வைத்தால் ஏறக்குறைய 720பி, நடுத்தரமாக வைத்தால் 480பி என்றஅளவுகளில் பெறலாம். குறைந்த தரத்தில் வீடியோவை அமைத்தால், வீடியோவில் உள்ள காரியங்களைப் பிரித்தறிலாம் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், மொபைல் டேட்டா இணைப்பில் ஹெச்டி வீடியோ ஸ்டீரிமிங்கை தவிர்க்கிறது. இந்த வகையில், டேட்டா உபயோகத்தைக் குறைக்க, ஏர்டெல் டிவி சிறந்தது எனலாம்.

 முடிவு

முடிவு

அதிக அளவிலான சேனல்களுடன் சில பிரத்யேகமான சேனல்களும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஜியோ டிவி உங்களுக்கான சிறந்த தேர்வாக அமையும். இது தவிர, முதல் முறையாக பயன்படுத்த ஆரம்பிக்கும் ஒருவருக்கு உடனடியாக பயன்படுத்த எளிதாக இருக்கிறது. டேட்டா உபயோகத்தில்
ஒரு கட்டுப்பாடு தேவைப்படும் பட்சத்தில், ஏர்டெல் டிவி சிறந்ததாக அமையும். மற்றபடி, இரண்டு அப்ளிகேஷனிலும் ஜியோ டிவி சிறந்தது எனலாம்.

Best Mobiles in India

English summary
Jio TV vs Airtel TV Which is the best live TV app; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X