Jio Cricket ஆப்ஸ் அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம்.. பரிசுகள் வெல்ல புதிய 'பிளே அலாங்' அம்சம்.!
ஜியோ நிறுவனம் தனது ஜியோ போன் பயனர்களுக்காக ஒரு புதிய கிரிக்கெட் மொபைல் பயன்பாட்டை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டை மக்கள் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி, கிரிக்கெட் மேட்ச்சின் ஸ்கோர்கள் மற்றும் விளையாட்டு நேரலையை நேரடியாக பார்க்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஜியோ கிரிக்கெட்
இந்த புதிய ஜியோ போன் பயன்பாடு, கிரிக்கெட் போட்டிகளின் நேரடி அப்டேட்களை பயனர்களுக்கு உடனுக்குடன் வழங்குகிறது. இது கிரிக்கெட் தொடர்பான வீடியோக்கள், கிரிக்கெட் செய்திகள் மற்றும் மேட்ச் அப்டேட் ஆகிய அனைத்து தகவல்களையும் ஜியோ நிறுவனம் இந்த ஒரே பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது. புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாடு இந்தியாவின் பல மொழிகளில் கிடைக்கும்படி நிறுவனம் செய்துள்ளது.

எத்தனை மொழிகளில் கிடைக்கிறது தெரியுமா?
பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பயன்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாடு பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பயன்படுத்த இப்பொழுது கிடைக்கிறது.

பிளே அலாங் (Play Along) அம்சம்
இந்த புதிய பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு அம்சம், ஜியோ கிரிக்கெட் பிளே அலாங் (Play Along) ஆகும். இதன் மூலம், பயனர்கள் வரவிருக்கும் போட்டி அப்டேட்களை கணித்து, அதற்கான பரிசுத் தொகையை வெல்லுவதற்கான வாய்ப்பையும் பயனர்கள் பெறமுடியும். ஜியோ கிரிக்கெட் பிளே அலோங் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ .50,000 வரை பரிசு வவுச்சர்கள் வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் அப்டேட் மற்றும் பரிசு வெல்லும் வாய்ப்பு
ஜியோ கிரிக்கெட் பயன்பாடானது பல இந்திய மொழிகளில் கிடைத்தாலும் கூட, ஜியோ கிரிக்கெட் பிளே அலாங் விளையாட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. பயன்பாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பயனர்களுக்கு சமீபத்திய போட்டி அப்டேட்கள் மற்றும் பரிசு வெல்லும் வாய்ப்பை வழங்குவதாகவும். எனவே இனி மக்கள் இவற்றை தேடி வேறு பயன்பாட்டிற்குச் செல்ல வேண்டியதில்லை என்று ஜியோ கூறியுள்ளது.

எங்கே டவுன்லோட் செய்ய கிடைக்கும்?
இந்தியன் பிரீமியர் லீக் நவம்பர் 10 ஆம் தேதி இறுதிப் போட்டியை நெருங்கும் நேரத்தில் இந்த பயன்பாடு வெளிவந்திருப்பது கூடுதல் பயனர்களை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் ஜியோ போனில் உள்ள ஜியோ ஸ்டோரிலிருந்து இந்த புதிய ஜியோ கிரிக்கெட் பயன்பாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

புதிய ஜியோ பிரௌசர் பயன்பாடு
சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஜியோ பேஜஸ் (Jio Pages) எனப்படும் இந்தியா பிரௌசர் பயன்பாட்டையும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications