Home
Apps

சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.!

“செயற்கைக் கோள் ஏவுவதற்கான தேவை ஏற்பட்டவுடன் குறைந்த அளவிலான உபகரணங்களுடன் மிக விரைவாக இந்த ஏவு வாகனத்தைத் தயார் செய்ய முடியும் என்பதுதான் இதனுடைய சிறப்பு அம்சமாகும்.”

By Abu Bakker Fakkirmohamed

செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடனும், தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தும் வகையிலும் சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனத்தைத் (SSLV) தயாரிக்கும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (ISRO) இறங்கியுள்ளது. மூன்று அல்லது ஆறு நபர்களின் உதவியுடன் மூன்று நாட்களுக்குள் செயற்கைக் கோள் ஏவுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட உள்ளது.

சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.!

“செயற்கைக் கோள் ஏவுவதற்கான தேவை ஏற்பட்டவுடன் குறைந்த அளவிலான உபகரணங்களுடன் மிக விரைவாக இந்த ஏவு வாகனத்தைத் தயார் செய்ய முடியும் என்பதுதான் இதனுடைய சிறப்பு அம்சமாகும்.” எனக் கூறுகிறார் இஸ்ரோவின் தலைவர் கே.சிவன். 300 முதல் 400 நபர்கள், 45 முதல் 60 நாட்கள் வரை பணியாற்றினால்தான் பெரிய செயற்கைக் கோள் ஏவு வாகனத்தைத் தயார் செய்ய முடியும். ஆனால் இந்தச் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை 3 முதல் 6 நபர்களின் உதவியுடன் 72 மணி நேரத்திற்குள் விண்ணில் செலுத்தத் தயார் செய்துவிடலாம்.


“இது ஒரு புதுமையான முயற்சி. பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை வணிகரீதியாக ஏவுவதற்கு இது துணை செய்யும். இந்த வாகனத்திற்கான வடிவமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. வணிக ரீதியாகச் செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு இதன் மூலம் வாய்ப்புகள் பெருகும்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் சிவன்.

சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.!

இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் முன்னோடியாகவும் தந்தையாகவும் கருதப்படுகின்ற டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் 127 ஆவது பிறந்த தின விழாவில் பங்கு கொண்ட இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனத்தின் வடிவமைப்புப் பணிகள் நிறைவு பெற்று அதனுடைய தயாரிப்புப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. அடுத்த ஆண்டு மே மாதம் அல்லது ஜீன் மாதத்தில் சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனம் தன்னுடைய சோதனை ஓட்டத்திற்காகத் தயாராக இருக்கும் என நம்புவதாக கே.சிவன் தெரிவிக்கிறார்.

சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.!

“ துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனத்தைத் (PSLV ) தயாரிப்பதற்கு ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்குதான் சிறிய செயற்கைக் கோள் ஏவு வாகனத்தைத் (SSLV) தயாரிப்பதற்கு செலவாகும் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இது 500 கிலோ முதல் 700 கிலோ வரை எடையுள்ள செயற்கைக் கோளைச் சுமந்து செல்லக் கூடிய திறன் பெற்றதாகும். தாழ்வான சுற்று வட்டப் பாதையிலும் இதனைச் செலுத்த முடியும். இந்த ஏவு வாகனத்தின் நீளம் 34 மீட்டர். 2 மீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். தேவை ஏற்படும் பொழுது, குறைந்த உபகரணங்களின் உதவியுடன், உடனே ஏவுவதற்குத் தயார்படுத்தும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்படுகிறது.
சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத் (SSLV) தயரிப்பில் ISRO.!

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வணிக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் (Antrix ) அமைப்பின் உதவியுடன் இந்த வாகனம் வியாபார ரீதியாகத் தயாரிக்கப்படும். இந்தச் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜீன் மாதத்திற்கள் நிறைவு பெற்றுவிடும் எனத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
ISRO Preparing SSLV Rockets for On Demand Launches : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X