குழந்தைகளை கெடுக்க ஐஎஸ்ஐஎஸ் செயலி வெளியிடப்பட்டுள்ளது.!!

By Meganathan
|

தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் புதிய செயலி ஒன்றை மே மாதம் 11 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. "லிபெர்டி ஆஃப் ஸீல்" (Liberty of Zeal) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலி குழந்தைகளுக்கு எழுத்துக்களை ஜிஹாதி முறையில் கற்பிக்க ஏதுவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் சேனல் மற்றும் இதர ஃபைல் ஷேரிங் தளங்களில் வெளியான செயலியானது குழந்தைகள் அரேபிய சொற்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கற்று கொள்ளும் வகையில் இருக்கின்றது. இவைகளில் பெரும்பாலும் டேன்க், துப்பாக்கி, ராக்கெட் போன்ற சொற்கள் இடம் பெற்றிருக்கின்றது.

1

1

குழந்தைகள் சொற்களுக்கான புகைப்படங்களையும் பிரவுஸ் செய்ய முடியும். புகைப்படங்களில் துப்பாக்கி மற்றும் டேன்க்கர்களின் கார்டூன் படங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இதோடு கனான், தோட்டா மற்றும் வாள் போன்ற படங்கள் இருப்பதோடு இவை ஆண்ட்ராய்டு கருவிகளில் பதிவிறக்கம் செய்யும் படி இருக்கின்றது.

2

2

ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் செயலி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த செயலி வெளியிடப்பட்டது. இதனை கோஸ்ட் செக்யூரிட்டி க்ரூப் என்ற அமைப்பு கண்டுபிடித்தது.

3

3

கோஸ்ட் செக்யூரிட்டி க்ரூப் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை இண்டர்நெட்டில் முழுமையாக இயங்க விடாமல் தடுக்கும் பணிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

4

4

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட செயலியில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள், கொலை சம்பவங்களின் வீடியோக்களும் இருந்தது.

5

5

என்க்ரிப்ட் செய்யப்பட்ட டெலிகிராம் செயலியானது ஐஎஸ்ஐஎஸ் தகவல் பரிமாற்றம் செய்ய கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

6

6

டெலிகிராம் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 12 மொழிகளில் 78 ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த சேனல்களை முடக்கியுள்ளதாகவும், மேலும் இந்த இயக்கத்தை முழுமையாக முடக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

7

7

இண்டர்நெட்டில் ஒரு பக்கம் தீவிரவாத இயக்கங்களை முடக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும், அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை செய்து வருவது தொடர் கதையாகவே இருக்கின்றது.

8

8

ஏப்ரல் மாதம் தலிபான் தீவிரவாத அமைப்பு அலிமராஹ் என்ற பெயரில் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை வெளியிட்டது. இந்த செயலியில் தலிபான் தகவல்களை பரப்புவதோடு அந்த அமைப்பு சார்ந்த வீடியோக்களும் இருந்தது.

9

9

எனினும் இந்த செயலி வெளியானதும் இதனை கண்டறிந்த SITE இன்டெல் குழு முயற்சியால் இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சிறிது நேரத்தில் நீக்கப்பட்டு விட்டது.

10

10

செயலிகளை உருவாக்குவதோடு தீவிரவாத அமைப்புகள் சமூக வலைதளங்களையும் தங்களின் தீய நோக்கங்களுக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலான அமெரிக்க ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கூகுள் ப்ளஸ், ஃபேஸ்புக், மற்றும் டம்ப்ளர் போன்ற தளங்களில் இயங்கி வருகின்றனர்.

11

11

இரசாயன ஆயுதம் தயாரிக்கும் ஐஎஸ்ஐஎஸ் : சர்வதேச நிறுவனம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.!!

ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!

12

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
ISIS launched New mobile app for children Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X