ட்ரூகாலர் செயலி சீனாவை சேர்ந்ததா? இதன் நிறுவனர் யார்? முழுவிவரங்கள்.!

|

தொடர்ந்து பல்வேறு செயலிகளை பயன்படுத்துவதற்கான தடையை இந்திய அரசு அறிவித்ததிலிருந்து ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்கள் எந்தவொரு ஆப் பயன்பாட்டையும் பதிவிறக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் எச்சரிக்கையாகிவிட்டனர்என்றுதான் கூறவேண்டும்.

ள் பிரபலமான செயலி எது? அது

இப்போது மக்கள் பிரபலமான செயலி எது? அது எங்க உருவாக்கப்பட்டது என்ற தகவல்களை ஆராயத் தொடங்கிவிட்டனர். மேலும்இது குறித்து பேசுகையில், சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட அழைப்பாளர் ID செயலிகளில் ஒன்றான ட்ரூகாலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரேடாரின் கீழ் வந்தது. ஆனால், இந்த ஆப் பயன்பாட்டின் தோற்றம் என்ன, இந்தியாவில் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? போன்ற விவரங்களை இப்போது அறிந்துகொள்வோம்.

59சீன செயலிகளுக்கு தடை

அன்மையில் 59சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து ட்ரூகாலர் செயலியின் தோற்றம் குறித்து பலரும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக சாதன இருப்பிடம், அழைப்பு, எஸ்எம்எஸ் பதிவுகள், போன் பல பயனர்களின் தரவை ட்ரூகாலர் சேகரிப்பதால், பாதுகாப்பு அக்கறை மக்களிடையே உயர்ந்தது.

வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!

ஸ்காண்டிநேவியா AB

ஆனால் இந்த செயலி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனமான ட்ரூ சாஃப்ட்வேர் ஸ்காண்டிநேவியா AB உருவாக்கியுள்ளது. குறிப்பாக இது 2009-ம் ஆண்டில் ஆலன் மாமேடி மற்றும் நமி ஸரிங்கலம் ஆகியோரால் நிறுவப்பட்டது. எனவே இந்த தகவல் ட்ரூகாலரை சீனாவை தளமாகக் கொண்ட ஒரு பிராண்டாக பரிந்துரைக்கும் வதந்திகளுக்கு ஒய்வு அளிக்கும் என நம்புகிறோம்.

 500மில்லியனுக்குஅதிகமாக

தற்சமயம் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது, பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் செயலியின் அளவு 38.82MB மற்றும் 4.4-நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ட்ரூகாலர் செயலி 500மில்லியனுக்குஅதிகமாக பதிவிறக்கங்களை கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

 தகவல் சேகரிப்பை

குறிப்பிட்ட எண்களை பற்றிய தகவல் சேகரிப்பை நிகழத்த ட்ரூகாலர் ஆப் ஆனது பயனர்களின் போன் காண்டாக்ட்களை நம்பியுள்ளது. அதாவது இந்த ஆப் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, உங்களின்எண்களை பற்றிய தொடர்பு விவரங்கள் ட்ரூகாலரில் கிடைக்கின்றன,ஏனெனில் இந்த ஆப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் எவரோ ஒருவர் உங்கள் மொபைல் எண்ணை அவரது போனில் சேமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?Samsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும், உங்களது மொபைல் எண்ணை

உங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும், உங்களது மொபைல் எண்ணை தரவுத்தளத்திலிருந்து அன்லிஸ்ட் செய்வதற்கும் நீங்கள் தயாராக இருந்தால், கீழ்வரும் வழிமுறைகள் பின்பற்றவும்.

ட்ரூகாலர் கணக்கை டீஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்

ட்ரூகாலர் கணக்கை டீஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்

  • முதலில் உங்கள் போனில் இருக்கும் ட்ரூகாலர் ஆப்வசதியை திறக்கவும்.
  • அடுத்து மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானைகிளிக் செய்யவும்.
  • பின்னர் செட்டிங்கஸ்-ஐ கிளிக் செய்து, ப்ரைவஸி சென்டருக்குள் செல்லவும்,இப்போது டீஆக்டிவேட் பட்டனை கிளிக் செய்யவும்.
  • இப்போது டிஆக்டிவேட் பட்டனை கிளிக் செய்யவும்.
  • பின்பு உறுதிசெய்ய Yes என்பதை கிளிக் செய்வதின் மூலம் ட்ரூ காலர் அக்கவுண்ட்டை எளிமையாக செயலிழக்க வைக்கலாம்.
  •  ட்ரூகாலரில் உங்கள் மொபைல் எண்ணை நீக்க வழிமுறைகள்

    ட்ரூகாலரில் உங்கள் மொபைல் எண்ணை நீக்க வழிமுறைகள்

    1.முதலில் குறிப்பிட்ட ப்ரவுஸர் வழியாக https://www.truecaller.com/unlisting என்பதை திறக்கவும்
    2. அடுத்து உங்கள் நாட்டின் குறியீட்டைக் கொண்டு எங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
    3.பின்னல் அன்லிஸ்ட் போன் நம்பர் என்பதை கிளிக் செய்தால் போதும், நீக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Is Truecaller App Developed by Chinese Company? Check the Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X