ஒவ்வொரு பேடிஎம் பயனர்களுக்கும் பாதிப்பா.? ஏன்.? எதனால்.? எப்படி.?

|

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் ஆனது பேடிஎம் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும் என்றும், பணபரிமாற்றத்தை குழப்பும் என்றும் பீதிகள் எழுந்த வண்ணம் உள்ளன.

நமது பிரதானமான பேடிஎம் ஆப் ஆனது ஒரு பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியாக அறிமுகமாகி பேடிஎம் ஆப்பில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த சேவை மூலம் நிறுவனம் டெபிட் கார்டுகளைத் தொடங்குவதோடு சேமிப்புக் கணக்குகளில் வட்டி விகிதங்களையும் வழங்குகின்றன. இது பாரம்பரிய வங்கிகளுடன் போட்டியிடும் வண்ணம் உள்ளது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் மக்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்துமா.? பாதிப்புகளை உண்டாகுமா.? என்பதை பற்றிய தொகுப்பே இது.

பிரதான மாற்றம் என்ன.?

பிரதான மாற்றம் என்ன.?

உங்களின் பேடிஎம் பணப்பையை மே 23-க்குப் பிறகு பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிமிட் (பிபிபிஎல்) ஆக மாற்றி அமைக்கப்படும். ஆனாலும் உங்கள் பணப்பை எப்போதும் போன்றே செயல்படும்.

பேடிஎம் பணப்பையில் என்னென்ன மாற்றங்கள்.?

பேடிஎம் பணப்பையில் என்னென்ன மாற்றங்கள்.?

எந்த மாற்றமும் இல்லை. பணப்பை வணிக நிறுவனம் பிபிபிஎல் நிறுவனத்திற்கு மாற்றப்படும் ஆனால் அது எப்போதும் போலவே செயல்படும், அவ்வளவுதான். இப்போது, ஏர்டெல் மற்றும் இந்தியா போஸ்ட் மட்டுமே பேமன்ட்ஸ் வங்கி செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில், ஆதித்யா பிர்லா ஐடியா பேமன்ட்ஸ் பேங்க் இந்த ஆண்டின் முதல் பாதியில் சேவைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணப்பை சேவை டூ வங்கி சேவை - இந்த பிரதான மாற்றத்திற்கான நோக்கம் என்ன?

பணப்பை சேவை டூ வங்கி சேவை - இந்த பிரதான மாற்றத்திற்கான நோக்கம் என்ன?

பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியின் முக்கிய நோக்கம் - இந்தியாவின் சேவை பெறாத மற்றும் சேவை செய்யும் சமூகத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களை பிரதான பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதாகும்.

இந்த சேவைக்கு நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா.?

இந்த சேவைக்கு நான் ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா.?

இந்த புதிய பிபிபிஎல் சேவைக்கு உங்கள் பணப்பையை மாற்றபடுவது தானாகவே நடக்கும். தனிப்பட்ட ஒருவர் தனது அக்கவுண்டில் உள்ள பணத்தை பற்றி எந்தவொரு கவலையும் கொள்ளத்தேவையில்லை.

பேடிஎம் பணப்பையில் இருக்கும் என் பணம் என்னவாகும்?

பேடிஎம் பணப்பையில் இருக்கும் என் பணம் என்னவாகும்?

பேடிஎம் வேலட்டில் உள்ள பணம் அதன் பணப்பை வணிகத்தில் புதிதாக இணைத்துள்ள நிறுவனத்திற்கு (பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க்) மாற்றும். பின்னர் உங்களின் பணம் புதிய நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறும்.

இந்த மாற்றத்திற்குப் பிறகு நான் ஒரு புதிய கணக்கைத் திறக்க வேண்டுமா?

இந்த மாற்றத்திற்குப் பிறகு நான் ஒரு புதிய கணக்கைத் திறக்க வேண்டுமா?

இல்லை. நீங்கள் உங்கள் பேடிஎம் பணப்பையை அதே அக்கவுண்ட் கொண்டு தொடரலாம். அது வேலை செய்யும். ஒருவேளை நிறுவனத்தின் புதிய கட்டண வங்கியுடன் புதிய கணக்கைத் திறக்க விரும்பினால், நீங்கள் புதிய அக்கவுண்ட்டை திறக்கலாம்.

பேடிஎம் வங்கியில் ஒரு புதிய கணக்கை எவ்வாறு திறப்பது?

பேடிஎம் வங்கியில் ஒரு புதிய கணக்கை எவ்வாறு திறப்பது?

பேடிஎம் வங்கி நீங்கள் ஒரு தனி கணக்கு திறக்கும் விருப்பத்தை உங்களுக்கு அளிக்கிறது. நீங்கள் பணம் செலுத்தும் வங்கி கணக்கைத் திறக்க விரும்பினால் வட்டியுடன் சம்பாதிக்கலாம்.

பிற வங்கிகளில் இருந்து இது எப்படி வேறுபட்டது?

பிற வங்கிகளில் இருந்து இது எப்படி வேறுபட்டது?

பேடிஎம் வங்கியானது உங்கள் கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் பணத்தின் வரம்பைக் கொண்டிருக்கும்போதே வழக்கமான வங்கிகளைவிட வித்தியாசமாக வேலை செய்கிறது. இந்த பேடிஎம் வங்கியில் ஒரு வாடிக்கையாளர் ரூ.1 இலட்சத்தை விட அதிகமாக வைத்திருக்க முடியாது. அதவது தனிநபர்களிடமிருந்தும் சிறு வியாபாரங்களிடமிருந்தும் பணம் செலுத்தும் வங்கிகள் ரூ.1 லட்சம் என்ற எல்லை புள்ளியை கொண்டிருக்கும், மேலும் பேடிஎம் வங்கியானது முன்கூட்டியே பணத்தை கொடுக்கவோ அல்லது கடனாகவோ அளிக்காது. அனால், இது பேங்க் புத்தகங்களையும், டெபிட் அட்டைகளையும் வெளியிடும் அனால் கிரெடிட் அட்டைகள் கிடையாது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Is Paytm Payments Bank Affects You: What You Need to Know. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X