புகார் தெரிவிக்கவும், உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் ஐஆர்சிடிசி சார்பில் புதிய ஆப் அறிமுகம்.!
குறிப்பாக பியூஸ் கோயல் தெரிவித்தது என்னவென்றால் பாஜக ஆட்சியில் ரயில் விபத்துக்களில் 62 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடரந்து ஐஆர்சிடிசி அமைப்பு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன்படி ரயில்வே பயனிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களை தெரிவிக்க இரண்டு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த செயலிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு செயலிகளை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பியூஸ் கோயல்:
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது என்னவென்றால், ரயில் பயணிகள் தங்கள் புகார்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை
உடனடியாக பதிவு செய்ய வசதியாக Rail MADAD என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உணவுகள்
மேலும் 'menu on rails' என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால்ரயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் உணவுகளை ஆர்டர் செய்ய இந்த ''menu on rails'' உதுவும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 சதவீதம்:
குறிப்பாக பியூஸ் கோயல் தெரிவித்தது என்னவென்றால் பாஜக ஆட்சியில் ரயில் விபத்துக்களில் 62 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள ரயில்களில் 3வது ஏசி படுக்கை வசதி பெட்டிகளின் பராமரிப்பு தொடர்பான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறினார் என்பது குறிப்பிடதத்க்கது.

பிளாஸ்டிக்:
இப்போது பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உறுவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஆர்சிடிசி:
மேலும் புதிய ஐஆர்சிடிசி தளத்தில் find train எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும், இது எந்த ரயிலில் எத்தனை இருக்கை இருக்கிறது என்பதையும் பின்பு வெயிட்டிங் லிஸ்ட்ல் உள்ள விவரங்களையும் காண்பிக்கும். குறிப்பாக நீங்கள் எடுத்த டிக்கெட் எவ்வளவுசதவிகிதம் உறுதியாக கிடைக்கும் என்ற தகவலை தெரிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications