எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவும் ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் செயலி

By Siva
|

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் இண்டர்நெட் பயன்பாடு என்பது எந்த அளவுக்கு அத்தியாவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. இண்டர்நெட்டின் சக்தியை புரிந்து கொண்ட இந்திய அரசு அனைத்து துறைகளிலும் இண்டர்நெட்டை புகுத்தி பணிகளை எளிமையாக்கி வருகிறது.

எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவும் ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் செயல

அந்த வகையில் இந்தியன் ரயில்வே துறையும் ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் என்ற செயலியை அறிமுகம் செய்து அதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ரத்து செய்வது, டிக்கெட்டின் நிலையை அறிந்து கொள்வது ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் ஆகிய போன்களில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலியில் பல்வேறு வசதிகள் உள்ளது. புதிய அக்கவுண்ட் ஓப்பன் செய்வது, டிக்கெட்டுக்கள் புக் செய்வது, பெண்கள், தட்கல், பிரிமியம் தட்கல் என அனைத்து பிரிவுகளிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, ஆகிய வசதிகள் உள்ளது.

மேலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களின் நிலையையும் ஐஆர்சிடிசி ரெயில் கனெக்ட் செயலியிலும், ஐஆர்சிடிசி இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலிக்கு இப்போதும் 4.2 ரேட்டிங்கில் உள்ளது என்பதும் மற்ற அனைத்து டிராவல் செயலிகளை விட அதிக நபர்களால் விரும்பத்தக்கதுமாக உள்ளது. ஒரே செயலியில் ஒரு டிக்கெட்டின் அனைத்து அம்சங்களையும் ஹோம் பக்கத்திற்கு வராமலேயே முடித்து கொள்ளலாம்

சிறந்த டிசைன் மற்றும் சேவை:

சிறந்த டிசைன் மற்றும் சேவை:

இண்டர்நெட்டுக்கு புதியதாக வருபவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

யாருடைய உதவியும் இன்றி எந்தவித டெக்னிக்கல் அசிஸ்டெண்டும் இல்லாமல் தட்கல் உள்பட அனைத்து பிரிவுகளிலும் நாமாகவே டிக்கெட்டுக்களை மிக எளிதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறையும் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளது.

ஒரே குடையின் கீழ் அனைத்து விபரங்களும்:

ஒரே குடையின் கீழ் அனைத்து விபரங்களும்:

முன்பதிவு செய்வது மட்டுமின்றி எதிர்பாராதவிதமாக பயணம் ரத்தானால் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை எளிதில் கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும். மேலும் இதற்கு முந்தைய முன்பதிவுகளை பார்க்கும் வசதி, பாதுகாப்பான பரிவர்த்தனை, ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளது.

மேலும் இந்த செயலியின் மூலம் பயணத்தின் போது தேவைப்படும் உணவுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி விமான டிக்கெட்டுக்களையும் இதில் புக் செய்யும் வசதியும் உண்டு

விற்பனையில் அசத்திய சாம்சங் கேலக்ஸி ஜே தொடரில் இரண்டு புதிய மாதிரிகள்.!விற்பனையில் அசத்திய சாம்சங் கேலக்ஸி ஜே தொடரில் இரண்டு புதிய மாதிரிகள்.!

மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை நண்பர்களுக்கோ அல்லது

மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களை நண்பர்களுக்கோ அல்லது

உறவினர்களுக்கோ பகிர்ந்து கொள்ளவும் இதில் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி டிக்கெட்டுக்களை சேவ் செய்து தேவைப்படும்போது பிரிண்ட் எடுத்து கொள்ளவும் செய்யலாம். மேலும் முந்தைய முன்பதிவுகளை ஒரே க்ளிக்கில் டெலிட் செய்யவும் முடியும்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
IRCTC Rail Connect is one such app which helps you book the ticket, cancel it, and view the ticket status at your fingertips.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X