IRCTC iMudra VISA கார்டு இருந்த போதும் இனி எல்லாமே செய்யலாம்! ATM-ல் கூட பணம் எடுக்கலாம்!
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) iMudra என்ற புதிய VISA கார்டு பயன்முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி பயணச்சீட்டு முன்பதிவு செய்வது மட்டுமல்லாமல், பணத்தை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றம் செய்வது, ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது, ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பது போன்று பல காரியங்களுக்கு இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

IRCTC-யின் iMudra அட்டை
IRCTC-யின் iMudra அட்டை, டிஜிட்டல் அட்டை மற்றும் பிஸிக்கல் அட்டை என்று இரண்டு அட்டைகளாக வழங்கப்படுகிறது. இந்த iMudra பயன்பாட்டிற்காக IRCTC பிரத்தியேக பயன்பாட்டுச் செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொழுது அதன் கட்டணத்தை இனி நீங்கள் இந்த iMudra டிஜிட்டல் அட்டையைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.

பெடரல் வங்கியோடு இணைந்து புதிய முயற்சியை
இந்த புதிய முயற்சியை IRCTC, பெடரல் (Federal) வங்கியோடு இணைந்து, இந்த iMudra VISA அட்டையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டையைப் பயன்படுத்தி இந்திய ஷாப்பிங் இணையதளங்களில் இந்தியப் பணத்திற்கு விற்பனையாகும் பொருட்களை வாங்கலாம், இரண்டு பயனர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் கார்டு போல ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

iMudra VISA கார்டிற்கு கட்டணம்
iMudra அட்டைகளை வாங்க விரும்பும் பயனர்களுக்கு டிஜிட்டல் அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், பெடரல் வங்கி வழங்கும் iMudra VISA கார்டு, அதாவது பிஸிக்கல் அட்டையைப் பயனர்கள் பெறுவதற்கு ரூ. 236 என்ற கட்டணத்தைச் செலுத்தி தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

iMudra அட்டை
இந்த அட்டையை ஆக்டிவேஷன் செய்வதற்கென்று தனியாகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஒரு iMudra வாடிக்கையாளருக்கு ஒரு டிஜிட்டல் அட்டை மற்றும் ஒரு பிஸிக்கல் அட்டை மட்டுமே வழங்கப்படும்.

KYC தகவல் பதிவு செய்ய வேண்டும்
முழுவதுமாக KYC முடிக்கப்பட்ட iMudra பயனர்கள் ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யலாம், ஏடிஎம் மில் இருந்து பணம் எடுக்கலாம், KYC முடிக்கப்பட்டிருந்தால் உங்கள் வாலெட்டின் (Wallet) மாதாந்திர வரம்பை ரூ. 1,00,000 வரை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்ச KYC-ன் மாதாந்திர வரம்பு ரூ.10,000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு பரிவர்த்தனைகள் மட்டும் தான் பெடரல் வங்கி ஏடிஎம் மில் இலவசம்.

ஆதார் கார்டு உடன் இணைக்க வேண்டும்
பயனரின் KYC தகவல்களை எப்படி முழுவதுமாக முடிப்பது, முதலில் ஆன்லைன் சென்று உங்கள் ஆதார் கார்டு உடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் மூலமாக உங்கள் KYC தகவலை முழுவதுமாக பதிவு செய்து முடிக்கலாம் அல்லது ஆஃப்லைன் மூலமாக பிஸிக்கல் வெரிஃபிகேஷன் (verification) மூலமாகவும் KYC தகவல்களை நிறைவு செய்து iMudra பயன்பாட்டை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இனி டிக்கெட் முன்பதிவு ஈஸி
சாதாரண முறையைப் பின்பற்றி ரயில் பயணச்சீட்டு பதிவு செய்யும் முறையை விட iMudra வை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டை மிக விரைவாக முன்பதிவு செய்துகொள்ளலாம். iMudra ஆப் இல் உள்ள Easy OTP சேவையைப் பயன்படுத்தி உங்களுக்குக் கிடைக்கும் 6 எண்கள் கொண்ட OTP எண்களை வைத்து, iMudra பேமெண்ட் முறையைத் தேர்வு செய்து எளிதாக நொடியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications