ஐபிஎல் மேட்ச் பாருங்க, பணத்தை சம்பாதிக்கலாம்!

  ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டிகள் முழு மூச்சாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் விறுவிறுப்பான போட்டிகளை, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளைப் போல வெறுமனே டிவியின் முன் அமர்ந்து போட்டிகளின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு களிப்பதோடு இல்லாமல், இந்த ஆண்டு சில சுவாரஸ்சியமான நன்மைகளும் உள்ளன. இந்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு, அதன் பங்காளர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் அளிக்கும் பல்வேறு தேர்வுகளைப் பயன்படுத்தி, பல அட்டகாசமான பரிசுகளை வெல்ல முடியும்.

  ஐபிஎல் மேட்ச் பாருங்க, பணத்தை சம்பாதிக்கலாம்!

  போட்டிகளைக் குறித்த கணிப்பு, கற்பனை போட்டிகள் மற்றும் கேள்வி- பதில் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய அப்ளிகேஷன்கள் உள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளை ஆன்லைனில் காண உதவும் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோடிவி ஆகிய இரண்டும் பல போட்டிகளை நடத்தி, நீங்கள் பரிசுகளை வெல்ல உதவும் மிக பிரபலமான அப்ளிகேஷன்களாக உள்ளன. இது தவிர, உங்கள் சொந்த கற்பனை அணியை உருவாக்கி, அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க உதவும் மற்ற அப்ளிகேஷன்களும் உள்ளன.

  ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போதே, நீங்கள் பணம் சம்பாதிக்க உதவும் சில அப்ளிகேஷன் கீழே அளிக்கப்பட்டுள்ளன. இந்த அப்ளிகேஷன்களில் இருந்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  ஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங்

  ஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங் என்பது ஒரு நேரடி மொபைல் கேம் ஆகும். இதை மைஜியோ அப்ளிகேஷனைப் பயன்படுத்தி விளையாட முடியும். இந்த கேம் 11 மொழிகளில் அளிக்கப்படுவதோடு, இலவசமாக விளையாடலாம். இந்த ஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங் கேம் விளையாட, உங்களிடம் ஒரு ஜியோ சிம் கூட தேவையில்லை என்பது தான் இதில் சுவாரஸ்சியமான செய்தி ஆகும். ஜியோ நிறுவனம் மூலம் ஐபிஎல் 2018 டாரிஃப் திட்டத்துடன் இதுவும் இணைக்கப்பட்டுள்ளது.

  இது ஒரு கற்பனை கேம் ஆக செயல்பட்டு, அடுத்த பந்தில் அல்லது ஓவரில் என்ன நடக்கும் என்பதை உங்களை யூகிக்க வைக்கிறது. இந்த யூகங்களின் அடிப்படையில், அது உங்களிடம் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு நீங்கள் சரியான பதிலை அளிக்கும் பட்சத்தில், நீங்கள் புள்ளிகளைப் பெறலாம். இதில் உள்ள பவர் ப்ளே முறை மூலம் கூடுதல் புள்ளியைப் பெற முடியும். இந்தப் புள்ளிகளைப் பயன்படுத்தி, பல பரிசுகளை வெல்ல முடியும்.

  நீங்கள் பெற்ற புள்ளிகளைப் பயன்படுத்தி, உங்களுக்கான பரிசுகளை எப்படி பெறுவது என்பதை இன்னும் ஜியோ நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் ஒரு ஆடம்பரமான வீடு, பண முடிச்சு, 25 கார்கள் மற்றும் பல்வேறு பரிசுகளின் விவரங்கள் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஹாட்ஸ்டாரை பாருங்கள், விளையாடுங்கள்

  ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க நீங்கள் ஹாட்ஸ்டாரை பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஸ்டிரீமிங் தளத்தில் கூட ஒரு யூகத்தின் அடிப்படையிலான கேம் உள்ளது. இதில் அடுத்த பந்தில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகிக்க வேண்டியுள்ளது. உங்கள் பதில் சரியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் பரிசுகள் மற்றும் கூப்பன்களை வெல்ல முடியும்.

  ஒரு குறிப்பிட்ட கால அளவில் இந்த கேமை விளையாடும் போதே, அதன் புதிய நிலைகளை நீங்கள் திறக்கலாம். புதிய நிலைகளைத் திறப்பதன் மூலம் உங்களுக்கு அதிகளவிலான கூப்பன்கள் கிடைக்கின்றன. இதில் ஃபோன் பீ, ஓயோ ரூம்ஸ், யாத்ரா.காம் மற்றும் பேடிஎம் சலுகைகள் ஆகியவற்றின் கூப்பன்கள் உள்ளன.

  ட்ரீம் 11

  இந்தியாவில் உள்ள பிரபலமான கற்பனை லீக் அப்ளிகேஷன்களில், ட்ரீம் 11 என்பதும் ஒன்றாகும். இதில் 2 கோடி விளையாட்டு வீரர்களுக்கு மேலாக உள்ளதோடு, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுளும் வழங்கப்படுகின்றன. உங்கள் திறமைக்கு ஏற்ப உங்களுக்கான கற்பனை அணியை நீங்கள் கட்டமைக்க முடியும். உங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், நீங்கள் அதிக புள்ளிகளை வெல்ல முடியும். சீசனின் முடிவில் வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் இணையும் போதே, ரூ.100-க்கான போனஸ் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  ஐபிஎல் கற்பனை லீக்

  அதிகாரபூர்வமான அப்ளிகேஷனான இதில், ஒரு கற்பனை லீக் காணப்படுகிறது. இதில் வெற்றிப் பெறும் போது புள்ளிகளாக அளிக்கப்பட்டு, பின்னர் அதை பரிசுகளாக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ட்ரீம் 11 போலவே இருக்கிறது என்றாலும், இணையும் போது எந்த விதமான போனஸூம் அளிக்கப்படுவதில்லை. விருப்பமுள்ள எல்லா பார்வையாளர்களுக்கும், ஒரு கேமிங் தளத்தை அமைத்து கொடுக்கிறது அவ்வளவு தான்.

  பிரென்பாஸி

  இது ஒரு கேள்வி- பதில் அடிப்படையில் அமைந்த கேம் ஆகும். ஒவ்வொரு நாள் இரவு 9 மணிக்கும் ஒரு முட்டாள்தன அடிப்படையில் அமைந்த கேள்விகளைக் கேட்கிறது. இதில் லீக்கின் கடைசி கேள்வி வரை நிலைத்து நிற்கும் நபர் பரிசை வென்று, அதற்கான பரிசுத் தொகையை அவரது பேடிஎம் கணக்கில் பெற முடியும்.

  Instagram Simple Tips and Tricks (TAMIL)

  கேம்ஸ்கள் விளையாட, வாங்க உதவும் 5 முக்கிய இணையதளங்கள்

  Read more about:
  English summary
  As the IPL 2018 is going on, we have come up with a slew of apps those will let you earn money and win cash prizes. Jio Cricket Play Along, Hotstar, Dream 11, IPL Fantasy League and Brainbaazi are some apps those let you earn this IPL season. So what are you waiting for? Download any of these and start making money.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more