தடபுடலாக வாட்ஸ்ஆப் கொண்டுவந்த புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த நோட்டிஃபிக்கேஷன்களின் வழியாகவே நேரடியாக வாய்ஸ் மெசேஜை முன்னோட்டமிட உதவும் அம்சத்தை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

ஆப்பிள் போன் பயனர்களுக்கு மட்டுமே

வாட்ஸ்ஆப் கொண்டு வந்த இந்த புதிய அம்சம் டெஸ்ட் ஃப்ளைட்டின் ஒரு பகுதியாக 2.19.91.1 பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஐஒஎஸ்(iOS) ஆப்பிள் போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் ரிப்ளை செய்ய முடியாது

மேலும் இந்த ஆடியோ பிளேபேக் அம்சம் பொறுத்தவலை வாட்ஸ்ஆப் ஐஒடிஎஸ் சாதனங்களில் மெசேஜ்மற்றும் ஆடியோ கோப்புகளை இயக்க அனுமதிகக்கும், பின்பு வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள ஆடியோ
பிளேபேக் அம்சத்திற்கு உங்களால் டெக்ஸ்ட் ரிப்ளை மட்டுமே; செய்ய முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும்என்றால் வாய்ஸ் ரிப்ளை செய்ய முடியாது. பயனர்கள் இதற்கு வாட்ஸ்ஆப்பை திறந்து தான் அதைநகழ்த்த முடியும்.

பெங்களூரில் தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி.!பெங்களூரில் தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி.!

வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை

வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒப்புதலுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?அனைவருக்கும் இலவச செட்-டாப்-பாக்ஸ் வழங்க ஜியோ முடிவு! என்ன காரணம் தெரியுமா?

இறுதி கட்ட பணியில் உள்ள வாட்ஸ்ஆப் பேமெண்ட்

ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவைக்கான வணிக ரீதியான ஒப்பந்த தொடக்க ஒழுங்குமுறை அனுமதிகளை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்க வாட்ஸ் ஆப் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தற்பொழுது ஒப்பந்தம் இறுதி கட்ட பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பேமெண்ட் பீட்டா

வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகளுக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த தரவு விதிமுறைகளை வாட்ஸ் ஆப் ஒப்புக் கொண்டதையடுத்து தணிக்கை நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் பீட்டா வெர்ஷனில் இந்த பணம் செலுத்தும் சேவையை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
iPhone users can soon play WhatsApp audio messages from notifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X