கண்களை புகைப்படம் எடுத்தால் போதுமாம்: சில நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்? புதிய செயலி அறிமுகம்.!

|

கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகமாக உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுபாடுகளை அறிவித்து வருகின்றன. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது, கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவின் முதல் அலை

கொரோனாவின் முதல் அலை

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

 முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது

மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..

கண்களை புகைப்படம் எடுப்பதன்

இந்நிலையில் கண்களை புகைப்படம் எடுப்பதன் மூலம் கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறியலாம் என ஜெர்மனியில் செயல்படும் ஆப் டெவலப்பிங் நிறுவனம் தெரிவிதுள்ளது. மேலும் இது சார்ந்த முழுவிவரங்களைப் பார்ப்போம்.

இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!

செமிக் ஆர் எப்

செமிக் ஆர் எப்

வெளிவந்த தகவலின்படி, ஜெர்மன் நிறுவனமான செமிக் ஆர் எப் (Semic RF) என்ற நிறுவனம் கொரோனா வைரஸை கண்டுபிடிக்க செமிக் ஐ ஸ்கேன் (Semic EyeScan) என்ற செயலியை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த செமிக் ஐ ஸ்கேன் செயலியை நமது மொபைல்போனில் டவுன்லோடு செய்து, கேமராவில் புகைப்படம் எடுத்தால் சமந்தப்பட்டவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பதை இதுவே கண்டறிந்துச் சொல்லும் என்று கூறப்படுகிறது.

பதும் பார்க்கப்படுகிறது. இதை

இந்த மொபைல் செயலி எப்படி செயல்படுகிறது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி கொரோனா பாதித்த நபர்களுக்கு முக்கிய அறிகுறியாக கண்கள் வீங்கி இருப்பதும் பார்க்கப்படுகிறது. இதை பிங்க் ஐ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். எனவே இந்த செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படம் இந்த அறிகுறியை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபரக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்று கூறிவிடுமாம்.

பிங்க் நிற மாதிரிகளை கொண்டுள்ளனர் எ

மேலும் இதற்குவேண்டி செமிக் ஆர் எப் நிறுவனம் அவர்கள் கண்டுபிடித்த செமிக் ஐ ஸ்கேன் செயலியில் கொரோனா பாதிக்கப்பட்வர்களிடத்திலிருந்து எடுக்கப்பட்ட வேறுபட்ட 20 லட்ச பிங்க் நிற மாதிரிகளை கொண்டுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் 95 சதவிகிதம்

இந்த புதிய செயலியின் முடிவுகள் 95 சதவிகிதம் சரியாக உள்ளதாகவும், குறிப்பிட்ட சில நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 70,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

செமிக் ஆர் எப் நிர்வாக இயக்குநர்

மேலும் இந்த செயலி ஆனது அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று செமிக் ஆர் எப் நிர்வாக இயக்குநர் உல்ஃகேங் குர்பர் என்பவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Introducing the new Semic Eye Scan app to detect corona infection by photographing the eyes: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X