Home
Apps

இந்த 10 விஷயம் தெரியலான ஸ்மார்ட்போன் யூஸ் பண்றது வேஸ்ட்! 'சீக்ரெட் டிப்ஸ' மிஸ் பண்ணாம படிங்க!

உலகளவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களை இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள் இதில் நீங்கள் யார்? மெசேஜ், கேம் மற்றும் வாய்ஸ் கால் என சராசரியாக ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்கும் மேலாக நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கும் ஒரு மாமனிதர்தான். உங்களுக்கு இந்த 'சீக்ரெட்' ஸ்மார்ட்போன் விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இரண்டு வகை ஸ்மார்ட்போன் பயனர்

இரண்டு வகை ஸ்மார்ட்போன் பயனர்

முதல் வகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வெறும் போனாக மட்டும் பயன்படுத்துபவர்கள், அதில் உள்ள சில தந்திரங்கள் தெரியாமல் நாட்களை கடந்துவிடுகிறார்கள். இரண்டாவது வகை பயனர்களை 'ஸ்மார்ட்போன் அடிக்ட்' என்பார்கள், இந்த பயனர்களுக்கு ஸ்மார்ட்போன் பற்றிய சில விபரங்கள் அறிந்தாலும் கூட, இந்த சூட்சமங்கள் தெரிந்திருக்காது. இவர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்தை போனிலேயே முடித்துவிடுவார்கள்.

ஸ்மார்ட்போன் குறித்த அறிவு பல மடங்கு அதிகரிக்க

ஸ்மார்ட்போன் குறித்த அறிவு பல மடங்கு அதிகரிக்க

இந்த இரண்டு வகையில் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் தந்திரங்கள் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுளை காப்பாற்றும் சீக்ரெட் டிப்ஸையும் இந்த பதிவில் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன் தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்வதின் மூலம் உங்களின் ஸ்மார்ட்போன் குறித்த அறிவு பல மடங்கு அதிகரிக்கும். இந்த விஷயங்கள் தெரியாமல் போனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே வேஸ்ட்.

ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப்பாக மாற்றலாம்

ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப்பாக மாற்றலாம்

இது நம் பலரின் யோசனைக்குள் உதித்த ஒரு எளிய தந்திரம், கூடவே சிறு பயனுள்ள ஒரு தந்திரமும் ஆகும். வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவின் முன் ஒரு லென்ஸை வைக்க அது தொலைதூர பார்வையை கொடுக்கும். இது மற்ற பக்கத்தில் ஒரு விரிவான புகைப்படத்தைப் பதிவு செய்யவும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் கேமராவை மைக்ரோஸ்க்கோப்பாக மாற்றலாம்

ஸ்மார்ட்போன் கேமராவை மைக்ரோஸ்க்கோப்பாக மாற்றலாம்

ஸ்மார்ட்போன் கேமராவை டெலஸ்கோப் ஆக மாற்றுவதை போன்றே இதுவும் மிகவும் சுலபம் தான். உங்கள் தொலைபேசியின் கேமராவில் சிறிய லென்ஸை இணைத்தால் போதும். உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு கையடக்க, டிஜிட்டல் நுண்ணோக்கியாக மாறிவிடும். இந்த அற்புதமான ஹேக் ஆனது மைக்ரோ கண்களின் வழியாக இந்த உலகை ஆராய்ந்து, அழகான புகைப்படங்களை எடுக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

வெப்ப கேமராவாக பயன்படுத்தப்படலாம்

வெப்ப கேமராவாக பயன்படுத்தப்படலாம்

இராணுவம் மற்றும் பிற வல்லுநர்களுகாக கண்டுபிடிக்கப்பட்ட சீக தெர்மல் தொழில்நுட்பமானது தற்போது அனைவர்க்கும் கிடைக்கிறது. இது உங்கள் தொலைபேசியுடன் இணைக்கபடக்கூடிய இந்த சிறிய கேமரா ஆனது, உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையுமே ஒரு வெப்ப படமாக பதிவு செய்ய அனுமதிக்கிறது.

ஆப் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனை AR மேப் ஆக மாற்றலாம்

ஆப் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனை AR மேப் ஆக மாற்றலாம்

இதற்கு எந்தவிதமான ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியது இல்லை. வெறுமனே கார் கண்ணாடியின் அருகில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து வைத்து விட்டால் போதும். கண்ணாடியின் பிரதிபலிப்பின் விளைவாக ஆகுமென்டட் ரியாலிட்டி போன்ற மேப் தயாராகிவிடும். மொபைலை பார்த்துக்கொண்டே ரிஸ்க் எடுத்து வண்டி ஓட்டும் விபரீதம் இனி வேண்டாம்.

பார் குறியீடுகளை ரீட் செய்ய முடியும்

பார் குறியீடுகளை ரீட் செய்ய முடியும்

பார் குறியீடுகளை மட்டுமல்ல உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது க்யூஆர் குறியீடுகளையும் கூட ரீட் செய்யும். அனைத்து பெரிய கடைகளிலும், பொருட்களின் விவரங்களை வழங்கும் ப்ரீ பார்கோட் ரீடர்கள் இருக்கும். அது உதவவில்லை என்றால் ரெட்லேசர் போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் வழியாக இதய துடிப்பை பார்க்க முடியும்

ஸ்மார்ட்போன் வழியாக இதய துடிப்பை பார்க்க முடியும்

இன்ஸ்டன்ட் ஹார்ட் ரேட் (ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ்) போன்ற பயன்பாடுகளின் டெவலப்பர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் உங்கள் இதய துடிப்பின் அளவை அளவிட முடியும் என்று கூறுகின்றனர். கேமராவின் முன் உங்கள் விரலை வைக்க வேண்டும் பின், குறிப்பிட்ட ஆப் ஆனது இரத்த துடிப்பு காரணமாக உங்கள் தோல் நிறத்தில் நடக்கும் சிறிய மாற்றங்களை கண்காணிகுமாம். பின்னர் சிறிது நேரம் கழித்து, அது உங்கள் இதய துடிப்பின் காட்சிப்படுத்துமாம்.

பழைய நெகடிவ் ரோல்களை டிஜிட்டைஸ் ஆக்கலாம்

பழைய நெகடிவ் ரோல்களை டிஜிட்டைஸ் ஆக்கலாம்

போட்டோ நெகடிவ்களை ஸ்கேன் செய்து டிஜிடைஸ் செய்ய இது ஒரு சிறந்த வழி அல்ல, என்றாலும் கூட அவசரமாக குறிப்பிட்ட நெகடிவ்களை பார்க்க அல்லது பதிவு செய்ய வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் உதவலாம். ஹெல்முட் (HELMUT)பிலிம் ஸ்கேனர் போன்ற சில பயன்பாடுகளைப் பயன்படுத்தவும் முயற்சிக்கலாம்.

எல்லா பொருட்களையும் அடையாளம் காண உதவும் கேமரா

எல்லா பொருட்களையும் அடையாளம் காண உதவும் கேமரா

புதிய செயல்பாடான கூகுள் லென்ஸின் வழியாக புகைப்படம் கொண்டு குறிப்பிட்ட உணவகத்தையும், அதன் மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள் பற்றிய தகவலை பெறலாம். வாட்திபாண்ட் (WhatTheFont) போன்ற ஆப் மூலம் படத்தை ஸ்கேனிங் செய்வது மூலம் குறிப்பிட்ட எழுத்துருக்களை கண்டறியலாம் சொல்ல முடியும்.

வீடியோ ரெகார்ட் செய்துகொண்டே புகைப்படங்கள் எடுக்கலாம்

வீடியோ ரெகார்ட் செய்துகொண்டே புகைப்படங்கள் எடுக்கலாம்

வீடியோ ரெகார்ட் பட்டனுக்கு அடுத்ததாக காட்சிப்படும் ஷட்டர் பட்டனை அழுத்த வேண்டும். அவ்வளவுதான், இந்த வழிமுறையின் கீழ் புகைப்படம் எடுப்பது வழக்கமான புகைப்படமாக இருக்காது. ஏனெனில் அது வீடியோ கேமரா உணரிகளின் பின்னணியில் பதிவாகிறது. ஆனாலும் கூட அவசரதிற்கு ஒரு புகைப்படம் கிடைக்கும்.

கேமரா மூலம் AR ரூலர் ஆப்

கேமரா மூலம் AR ரூலர் ஆப்

அளவுகோலாக பயன்படுத்தலாம்.
ரூலர் ஆப் (Ruler App) போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட படத்தில் இருக்கும் பொருளின் அளவை அளவிடுவதற்கு பயன்படுகிறது. இந்த ஆப் ஆனது ஒரு அறை அல்லது நாற்காலி போன்ற பொருட்களின் பகுதிகளை அளவிட போதுமானதாக இருக்கிறது.

சீக்ரெட் டிப்ஸ்

சீக்ரெட் டிப்ஸ்

உங்கள் தொலைபேசியின் ஆயுளை அதிகரிக்க இந்த டிப்ஸ் மிகவும் உதவியாய் இருக்கும், உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுள் காலம் குறைய நிறைய காரணங்கள் உள்ளது. அதில், சார்ஜிங் போர்டில் தூசு, குப்பைகள், மற்றும் பிற துகள்கள் சேர்வதும் ஒன்றாகும். இந்த காரணம் ஆனது ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை குறைப்பது முதல் அது இயங்காமல் செய்வது வரை போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஓசி போட்ட எல்லாம் சரியா போகும்

ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஓசி போட்ட எல்லாம் சரியா போகும்

இதனை சரி செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. வெறுமனே காற்று இழுக்கப்பெற்ற ஒரு ஊசியை எடுத்து, சார்ஜ் போர்ட்டிற்குள்நுழைத்து இன்ஜெக்ட் செய்யவும் (காற்றை வெளியேற்றவும்). இப்படி செய்வதால் போர்ட்டில் உள்ள மிக மிக சிறிய தூசி மற்றும் துகள் வெளியேறும். சிம்பிள்!

Best Mobiles in India

English summary
Interesting Smartphone Features And Secret Tips To Improve Your Smartphone Life : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X