ஃபேஸ்புக் போல இன்ஸ்டாகிராமிலும் நேரடி வீடியோக்களை இப்போது சேவ் செய்யலாம்

இனி இன்ஸ்டாகிராம் வீடியோக்களை மிஸ் செய்ய வாய்ப்பே இல்லை

By Siva
|

சமீப காலத்தில் சமூக வலைத்தள பயனாளர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் நேரடியான லைவ் வீடியோ. இந்த நேரடி லைவ் வீடியோ கடந்த ஜனவரி முதல் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாராமிலும் 24 மணி நேரத்திலும் ஒளிபரப்பும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபேஸ்புக் போல இன்ஸ்டாகிராமிலும் நேரடி வீடியோக்களை இப்போது சேவ் செய்யலா

இந்நிலையில் இந்த நேரடி லைவ் வீடியோவில் ஒரு புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் நேரடி லைவ் வீடியோவை பதிவு செய்து எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு முக்கியமான வீடியோ லைவ்-இல் வருகிறது என்றால் அந்த வீடியோவாஇ மேலே உள்ள 'சேவ்' என்ற பட்டனை அழுத்தி உங்கள் போனில் பதிவு செய்து பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் நினைத்த நேரத்தில் பார்த்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ள ஒரு அம்சம் ஆகும். ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தால் அதே வீடியோ இன்னொருவருக்கு தேவையாக இருந்தால் பரிமாறி கொள்ள முடியும் என்பதால் இந்த வசதி மதிப்பில்லா வசதியாக கருதப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த நேரடி லைவ் வீடியோக்களை மட்டுமே சேவ் செய்ய முடியும். அந்த வீடியோவுக்கு பதிவான கமெண்ட்டுகள், வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இதர விஷயங்களை பதிவு செய்ய முடியாது. இந்த நேரடி லைவ் வீடியோ உங்கள் போனின் மூலம் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுவதால் அதன் பின்னர் இந்த வீடியோவை உங்கல் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்பட பல சமூக வலைத்தள நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும்

3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.!

நேரடி லைவ் வீடியோக்களை சேமிக்க விருப்பம் உள்ளவர்கள் ஒருவிஷயத்தை முக்கியமாக கவனித்து கொள்ள வேண்டும். இன்ஸ்டாகிராமில் லைவ் ஆகும் வீடியோக்கள் நீண்ட நேரம் அந்த ஆப்-இல் இருக்காது. எனவே இன்ஸ்டாகிராம் ஆப்-இல் இருந்து அந்த விடியோ நீக்கப்படுவதற்குள் நீங்கள் சேவ் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்,.

ஒரு வீடியோ சேமிக்கப்படுவதற்கு ஆகக்கூடிய நேரம், அந்த வீடியோவின் நீளத்தை பொருத்தது. ஏற்கனவே ஃபேஸ்புக் லைவ் வீடியோக்கள் சேமிக்கப்படும் வசதிகள் இருப்பதால் அதே நிறுவனத்தின் வாட்ஸ் அப்பிலும் இந்த வசதி இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இந்த வசதி மிகப்பெரிய அளவில் பயன் அளிக்கும் என்பதில் மட்டும் எந்தவித சந்தேகமும் இல்லை

மேலும் இந்த வசதியை பெற நீங்கள் இன்ஸ்டாகிராம் 10.12 வெர்ஷனை அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன் வைத்திருப்பவர்கள் பெறலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
On Monday, Instagram added another concept to their newborn live video. Now, it allows you to save those videos which you feel like rewatching later.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X