இன்ஸ்டாகிராமில் இந்த வசதி கூட வந்துருச்சா? பயனாளிகள் ஆச்சரியம்

Written By:

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், வாடிக்கையாளர்களின் நலன்களை முன்னிட்டு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த செயலி தன்னுடைய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இந்த வசதி கூட வந்துருச்சா? பயனாளிகள் ஆச்சரியம்

ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலியில் கலெக்சன், புதிய ஃபேஸ் பில்டர், ஹேஷ்டே, லோகேஷன் அறிதல் போன்ற பல வசதிகள் இருந்து வரும் நிலையில் இந்த புதிய அப்டேட்டில் இன்னும் சில சிறப்பான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலி தன்னுடைய புதிய அப்டேட்டில் நேரடி மெசேஜ் சர்வீஸை தொடங்கியுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட்டில் மெசேஜ் அனுப்பும்போதோ அல்லது சேட்டிங் செய்யும்போது தற்போது லிங்குகளையும் சேர்த்து அனுப்பலாம்.

இன்ஸ்டாகிராமில் இந்த வசதி கூட வந்துருச்சா? பயனாளிகள் ஆச்சரியம்

அதுமட்டுமின்றி தற்போது இந்த செயலி லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ராஃய்டு ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் அகலமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை முழு திருப்தியுடன் பார்க்கலாம்

மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ராஃய்டு ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் புகைப்படங்களை ஷேரிங் செய்யும்போதோ, சேட்டிங்கில் இணைக்கும்போதோ கிராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக கேலரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோக்களை தேர்வு செய்து நேரடியாக மிக எளிதாகவும், விரைவாகவும் அனுப்பலாம்

யூடியூப்பில் பணம் சம்பாதிக்க சில முக்கிய குறிப்புகள்.!

பிரைவைட் சேட்டிங்கில் புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பும்போது நாம் அனுப்புகின்ற புகைப்படங்களை பிரிவியூவாக அனுப்பும் முன்பே பார்த்து கொள்ளலாம். மேலும் புகைப்படத்தில் தலைப்பு கொடுக்கவோ, அல்லது புகைப்படம் குறித்த குறிப்புகள் எழுதவோ செய்யலாம்.

மேலும் லிங்குகள் அனுப்பும்போது எந்தவகையான லிங்குகளை அனுப்புகின்றோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் பயனாளிகள் போன் நம்பரையோ அல்லது முகவரியையோ அனுப்ப விரும்பினால் தானாகவே அது லிங்க் ஆக மாறிவிடும். எனவே இதை பெறுபவர்கள் அதிலிருந்தே கிளிக் செய்து போன் அழைப்பை பெறலாம்.

ஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட அப்டேட்டுக்கள் அனைத்தும் இப்போதைக்கும் ஐஒஎஸ் போன்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. ஆனாலும் இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கு மிக விரைவில் கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாற்றத்தால் இன்ஸ்டாகிராம் புதுப்பொலிவுடன் வாடிக்கையாளர்களை மேலும் கவர்ந்துள்ளது என்பது மட்டும் உண்மை

Read more about:
English summary
Instagram's new update will add new features to its Direct messaging service.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot