ஹேக் செய்த அக்கவுண்டை எளிதில் மீட்கலாம்: இன்ஸ்டாகிராம் அப்டேட் அசத்தல்!

|

இது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகம் பயப்படும் ஒன்று. ஆனால் இப்போது உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டால், அதிர்ஷ்டவசமாக இந்த புதிய அப்டேட் மூலம் அதை மீண்டும் மீட்பது மிக எளிதாக உள்ளது. இந்த வாரம் இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள இரண்டு புதிய அப்டேட்கள் மூலம், இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் செயல்முறை வேகமாகவும் மற்றும் எளிதாகவும் மாறியுள்ளதாக நம்பப்படுகிறது.

இரண்டு புதிய அப்டேட்களை பகிர்ந்து கொள்கிறோம்

இரண்டு புதிய அப்டேட்களை பகிர்ந்து கொள்கிறோம்

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் செய்தித் தொடர்பாளர் கூறிகையில் "உங்கள் இன்ஸ்டா கணக்கை அணுகமுடியாத அந்த தருணம் மிகவும் கவலையேற்படுத்தக்கூடிய அனுபவம். இன்ஸ்டாகிராம் கம்யூனிட்டியில் இருந்து வந்த பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஹேக் செய்யப்பட்டிருக்கும் கணக்கை எளிதாக மீட்பதற்காக நாங்கள் இரண்டு புதிய அப்டேட்களை பகிர்ந்து கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் முகவரி

மின்னஞ்சல் முகவரி

முதலாவதாக, இன்ஸ்டாகிராம் தனது புதிய 'இன் ஆப்' அனுபவத்தை பரிசோதித்து வருகிறது. இதனை உள்நுழைவு (Login) பக்கத்தில் உள்ள 'Need more help' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அணுகக்கூடியதாக இருக்கும்.

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்: இனிமேல் "அந்த" சிக்கல் இருக்காது.!

இந்த புதிய அம்சத்தில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற பல்வேறு வகையான தகவல்களை உள்ளிட கேட்கும்.

கணக்கை மீட்டெடுக்க இது உங்களை அனுமதிக்கிறது

கணக்கை மீட்டெடுக்க இது உங்களை அனுமதிக்கிறது

நீங்கள் தேர்வுசெய்யும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலுக்கு இன்ஸ்டாகிராம் 6-இலக்க குறியீட்டை அனுப்பும். இதன்மூலம் உங்கள் கணக்கை மீண்டும் பெற அனுமதிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த புதிய அம்சத்தின் சிறப்பம்சம் என்னவெனில், உங்களின் பயனர்பெயர் ஹேக்கரால் மாற்றப்பட்டிருந்தாலும், கணக்கை மீட்டெடுக்க இது உங்களை அனுமதிக்கிறது.

"கம்யூனிட்டி ஆபரேசன் டீம்"

மேலும் இன்ஸ்டாகிராம் கூறுகையில் "இந்த அம்சத்தை மேம்படுத்தும் வகையில், எந்தவொரு தகவல்களையும் "கம்யூனிட்டி ஆபரேசன் டீம்" க்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்காமல், நேரிடையாக செயலியில் இருந்தே இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்க அடுத்த சில மாதங்களில் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்" என்கிறது.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.!அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மணிமண்டபத்தை 3டி ஓவியத்தால் சிறப்பித்த ஓவியர்.!

பயனர்பெயரை பயன்படுத்த முடியாது

பயனர்பெயரை பயன்படுத்த முடியாது

இரண்டாவதாக எந்தவொரு கணக்கு மாற்றங்களுக்கும் பிறகு உங்கள் பயனர்பெயர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த ஒரு புதிய அம்சத்தை தொடங்குகிறது இன்ஸ்டாகிராம். அதாவது உங்கள் கணக்கை இழந்தாலும் வேறு ஒருவரால் அந்த பயனர்பெயரை பயன்படுத்த முடியாது.

கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3! அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்?கேமர்களுக்கான வரப்பிரசாதம் நுபியா ரெட் மேஜிக் 3! அப்படி என்ன இருக்கு என்று தெரியுமா இந்த போனில்?

பெயரை மாற்ற விரும்பினால்

பெயரை மாற்ற விரும்பினால்

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் விளக்குகையில், "யாராவது தங்களது பயனர்பெயரை மாற்றினாலோ அல்லது இழந்தாலோ (எடுத்துகாட்டாக பயனர் பெயரை மாற்ற விரும்பினால் அல்லது ஹேக் செய்யப்பட்டால்), அதை மற்றொருவர் விரைவாக பெறமுடியும் என்பதை தெரிந்துகொண்டோம். இந்த புதிய அம்சத்தின் மூலம், எந்தவொரு மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேறு யாருக்கும் தங்களது பயனர்பெயர் கிடைக்காதிருப்பதை அறிந்துகொள்ளும் பாதுகாப்பு பயனர்களுக்கு வழங்குகிறோம்" என்கிறது இன்ஸ்டாகிராம்.

இந்த புதிய அப்டேட் தற்போது அனைத்து ஆண்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கு வெளியாகவுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Instagram update makes it MUCH easier to recover your account if its hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X