இன்ஸ்டாகிராம் செய்திகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாற்றும் வசதி - விரைவில் அறிமுகம்?

  இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் செய்திகளை, அதன் பயனர்களால் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் வசதியை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, இந்த வசதியை வாட்ஸ்அப்பிற்கும் அளிக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

  இன்ஸ்டாகிராம் செய்திகளை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாற்றும் வசதி - விரைவில்

  இது குறித்து டெக்கிரன்ஞ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் இன்ஸ்டாகிராம் செய்திகளை நேரடியாக வாட்ஸ்அப்பில், அதன் ஸ்டேட்டஸாக இடுகையிடுவது குறித்து அந்நிறுவனம் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

  குறிப்பாக, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் செய்திகள் என இரண்டும் ஸ்னாப்செட் அம்சத்தை தழுவியதாக அமைந்துள்ளதால், பயனர்கள் தங்களின் திருத்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஐஎப்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

  ஸ்னாப்செட்டைப் போல இந்த ஸ்டேட்டஸ்களும் 24 மணிநேரத்திற்கு பிறகு தானாக மறைந்துவிடும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக இடுகையிடப்படும் ஒரு இன்ஸ்டாகிராம் செய்தியும், ஏனைய மெசேஜிங் அப்ளிகேஷன்களைப் போல மறைகுறியாக்கம் செய்யப்பட்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் எப்போதும் புதிய காரியங்களை சோதித்து வருகிறோம். இதன்மூலம் தங்களைச் சுற்றிலும் உள்ள நெருக்கமானவர்களுடன் உள்ள எந்த சந்தர்ப்பத்தையும், எளிதாகவும் சுமூகமாகவும் பயனர்களால் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அந்தச் செய்தியில் ஒரு செய்தியாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்தச் செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமின் செய்திகளை வாட்ஸ்அப்பில் இடுகையிடும் வசதி, சோதனை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

  மலிவு விலையில் சென்ட்ரிக் எல்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

  இன்ஸ்டாகிராமில் உள்ள பகிரும் திரையில் இருந்து செய்திகளை வாட்ஸ்அப்பிற்கு பகிருவதற்கான ஒரு தேர்வு இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதை தட்டுவதன் மூலம் பயனர்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருக்கும் அனுப்பு என்ற தேர்வை தட்டுவதன் மூலம் அந்த செய்தியை வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸாக இடுகையிட முடியும்.

  இது குறித்து பிரேசிலைச் சேர்ந்த டெக்னோபிளாக் என்ற ஒரு உள்ளூர் பிளாக்கில் வெளியிடப்பட்டுள்ள ஒரு இடுகையில், ஒரு படத்துடன் இன்ஸ்டாகிராம் செய்தியை இடதுபுறத்திலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வலதுபுறத்திலும் அமைத்து, கடந்த காலத்தில் பல்வேறு முறை காண முடிந்தது. குறிப்பாக, பகிரப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், வலதுபுற கீழ் முனையில் ஒரு இன்ஸ்டாகிராமின் ஐகான் இருப்பதைக் காணலாம்.

  இன்ஸ்டாகிராம் செய்திகளை, வாட்ஸ்அப் போன்ற மற்ற தளங்களில் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதன் பின்னணியில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் இன்ஸ்டாகிராம் செய்திகளின் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கவும், அதிகளவிலான மக்கள் பயன்படுத்தும் வகையில் பிரபலப்படுத்துவதும், முதன்மை காரணமாக இருக்கலாம். பேஸ்புக்கைப் பொறுத்த வரை, தினமும் இன்ஸ்டாகிராம் செய்திகளை வெளியிட 300 மில்லியனுக்கும் அதிகமான சுறுசுறுப்பான பயனர்கள் உள்ளார்கள்.

  இந்த எண்ணிக்கையை வைத்து பார்த்தால், ஸ்னாப்செட் தயாரிப்பிலேயே இன்ஸ்டாகிராம் தான் வரிசையில் முதலிடத்தில் நிற்கிறது. வெளிப்படையாக கூறினால், சந்தைகளில் அதிக பிரபலத்தன்மையைக் கொண்ட வாட்ஸ்அப்பில் பயனர்களின் மூலம் பகிர்ந்து கொள்ள வைத்து இந்நிறுவனத்திற்கு அதிக பயன்பாட்டை ஏற்படுத்த முடியும். மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கலாம்.

  இதையெல்லாம் சேர்த்து பார்க்கும் போது, இன்ஸ்டாகிராமின் செய்திகளை வாட்ஸ்அப்பின் ஸ்டேட்டஸாக பயன்படுத்தி கொள்ளும் வசதி அளிப்பதன் மூலம், பேஸ்புக்கின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையையும் பயன்பாட்டையும் அதிகரிக்க முடியும். ஸ்னாப்செட் மற்றும் பிற தளங்களை ஓரம்கட்டுவதற்காக கூட இந்த முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம்.

  Read more about:
  English summary
  Facebook appears to be looking forward to introduce an option that will let users to share their Instagram Stories on WhatsApp and use the same as WhatsApp Status. A recent media report claims that this feature is under testing and it could be an attempt by Facebook to hike the engagement of users and overall traffic.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more