இன்ஸ்டாகிராமில் தற்போது நேரடி மெசேஜ் அனுப்பும் வசதி

By Siva
|

சமூக வலைத்தளங்களில் முன்னணி இடத்த்தில் உள்ள செயலிகளில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராம் தற்போது நண்பர் ஒருவருக்கு மட்டும் நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்த புதிய வ்சதி தற்போது இன்ஸ்டாகிராமின் மொபைல் வெர்ஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இது விரிவாக்கப்படும் என தெரிகிறது

இன்ஸ்டாகிராமில் தற்போது நேரடி மெசேஜ் அனுப்பும் வசதி

மேலும் இந்த புதிய இன்ஸ்டாகிராம் வசதியை நீங்கள் பெற வேண்டுமானால் இன்ஸ்டாகிராமின் லேட்டஸ்ட் வெர்ஷனான 11.0ஐ நீங்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் இன்ஸ்டாகிராமின் புதிய வெர்ஷனை அப்டேட் செய்துவிட்டால் அப்போது உங்களுக்கு வலதுபக்கம் கீழ் பகுதியில் நேரடி மெசேஜ் அனுப்புவதற்கு உண்டான ஐகான் தெரியும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நண்பருக்கு மட்டும் நேரடி தகவல் ஒன்றை அனுப்ப வேண்டுமானால் அந்த ஐகானை க்ளிக் செய்து அதன் பின்னர் நீங்கள் நேரடி மெசேஜ் அனுப்ப வேண்டிய நண்பரை தேர்வு செய்யுங்கள்

மேலும் இந்த நேரடி மெசேஜ் 24 மணி நேரத்துக்கு மட்டுமே இருக்கும் என்பதும் அதன் பின்னர் தானாகவே டெலிட் ஆகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்திற்கு பின்னர் இந்த மெசேஜ் அனுப்பியவரிடமும் இருக்காது, பெற்றவரிடமும் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!வோடபோன் அறிவித்துள்ள புதிய கேஷ்பேக் சலுகைகள் மற்றும் அதன் விவரங்கள்.!

ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி தனிப்பட்ட வகையில் தகவல் பரிமாறும் வசதியாக இருந்தாலும் இதுவொரு முழு பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதக் தர முடியாது. தனிப்பட்ட இந்த தகவல்கள் பிறருக்கு பகிரவும் வாய்ப்பு உள்ளது

மேலும் இந்த நேரடி தகவல் பரிமாற்றும் வசதி தேவைப்படாதவர்கள் இந்த வசதியை டிஸேபிள் செய்து கொள்ளலாம். அதற்கு செட்டிங் செல்ல வேண்டும்.

இந்த புதிய வசதி இன்ஸ்டாகிராமில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்து இது ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைத்தளங்களிலும் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வசதியை பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
The new feature can be only accessed if your Instagram app is running the version 11.0.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X