போகஸ் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்.!

போகஸ் வசதியை பயன்படுத்த பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள கேமராவை திறக்க வேண்டும்.

|

ஸ்டோரிஸ் மற்றும் போஸ்டுகளில் போட்டோ எடுக்கும் பயனர்களுக்காக போகஸ் என்னும் புதிய வசதியை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ.எஸ் செயலிகளில் அப்டேட்டாக வழங்கியுள்ளது இன்ஸ்டாகிராம். இந்த புதிய வசதியானது ஏற்கனவே பல போன்களில் இருக்கும் போர்ட்ரேட் வசதியை ஒத்தது. ஆண்ட்ராய்டுஅப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐ ஓ.எஸ் க்கு இன்ஸ்டாகிராம் வெர்சன் 39.0 ஆகவும் உள்ளது.

போகஸ் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்.!

போகஸ் வசதியை பயன்படுத்த பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள கேமராவை திறக்க வேண்டும். அதில் சூப்பர் ஜூம் ஆப்சனுக்கு அருகில் போகஸ் ஆப்சனை பார்க்கலாம். இந்த போகஸ் வசதி முன்புறம் மற்றும் பின்புறம் என இருபுறங்களில் உள்ள கேமராவிலும் செயல்படும்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், பயனர்கள் போட்டோ மற்றும் வீடியோவும் எடுக்க முடியும். பயனர்கள் திரையில் கிளிக் செய்வதன் மூலம் போட்டோவும், திரையை அழுத்தி பிடிப்பதன் மூலம் வீடியோவும் எடுக்கலாம்.

பின்னர் போட்டோவை அப்படியேவோ அல்லது எமோஜி/ஸ்டிக்கர்கள் கொண்டு எடிட் செய்தோ பயன்படுத்தலாம். மேலும் அந்த போட்டோக்களை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக போடவோ, நேரடியாக மெசேஜாகவோ அனுப்பலாம்.

இந்த போகஸ் என்னும் புதிய வசதி, போட்டோவின் பின்புறத்தை ப்ளர் செய்து முக்கியமானவற்றை போகஸ் செய்ய உதவும் ஆப்பிளின் போர்ட்ரேட் மோடுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது.

போகஸ் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்.!

மொபைல் டூயல் கேமரா செட்டப்பை உபயோகிக்கும் போது, இன்ஸ்டாகிராம் கேமரா மென்பொருளை பயன்படுத்துகிறது. தற்போது இந்த வசதி ஐபோன் SE, 6S,6S+, 7,7+,8,8+,X மற்றும் சில ஆண்ராய்டு போன்களிலும் கிடைக்கிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

இந்த அப்டேட்டில் போகஸ் வசதியுடன், ஐபோன் பயனர்களுக்கு மட்டும் @mention ஸ்டிக்கர் என்னும் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் @mention ஸ்டிக்கரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இழுத்து மற்ற பயனர்கள் பெயரை டைப் செய்து அவர்களை குறிப்பிடலாம். @mention ஸ்டிக்கரையும் மற்ற இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர்களை போல எளிதாக எடிட் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Instagram Rolls Out New Bokeh-Like Focus Feature for iOS and Android Users; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X