Home
Apps

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இல் வருவாய் ஈட்ட புதிய அம்சம் இந்தியாவில் சோதனை.. எப்படி தெரியுமா?

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட பின்னர், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரீல்ஸ் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. டிக்டாக் போன்றே செயல்படும் இந்த வீடியோ தளத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஏராளமான வரவேற்பு கிடைத்து. அதனைத் தொடர்ந்து தற்பொழுது ரீல்ஸ் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இல் வருவாய் ஈட்ட புதிய அம்சம் இந்தியாவில் சோதனை..

தொடர்ச்சியான புது பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் நிச்சயமாக சில பயனர்களைக் கடுப்பேற்றினாலும், சிலருக்கு இது வருவாய் ஈட்டும் ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்புப் படி, நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் சேவையில் உள்ள ரீல்ஸ் தளத்தில் புதிதாக விளம்பரங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விளம்பரங்களுக்கான சோதனையை நிறுவனம் தற்பொழுது துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சோதனை இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் துவங்கி உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இல் வருவாய் ஈட்ட புதிய அம்சம் இந்தியாவில் சோதனை..

இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தில் இருந்து வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை துவங்கப்பட்டு இருக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரீல்ஸ் அம்சத்தில் வரும் மற்ற வீடியோக்களுடன் விளம்பர வீடியோக்கள் அதிகபட்சமாக 30 நொடிகள் வரை பிளே ஆகும் என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் விளம்பரங்களை முடக்கும் வசதியும் வழங்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

தற்சமயம் அமெரிக்கா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்துள்ளது இன்ஸ்டாகிராம். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸ் வசதிக்கு என்றே தனி டேபை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இல் வருவாய் ஈட்ட புதிய அம்சம் இந்தியாவில் சோதனை..

மேலும் இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி இந்தியாவில் இருக்கும் இன்ஸ்டா பயனர்களுக்காக பிரேத்யேகமாக அறிமுகமாக உள்ளது என்று நிறுவனம் குறிப்பிட்டு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷார்ட் வீடியோ மேக்கிங்கில் இந்திய மக்களிடம் இருக்கும் ஆர்வம் மற்றும் கிரியேட்டிவிட்டியின் காரணமாக இன்ஸ்டா நிறுவனம் ரீல்ஸ் டேபை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கிறது.

இனி வரும் நாட்களில் கூடுதலாக டூல்ஸ் வசதியையும் இணைக்க திட்டமிட்டுளோம் என தெரிவித்துள்ளார் பேஸ்புக் இந்தியாவின் இயக்குனர் மனீஷ் சோப்ரா.

Best Mobiles in India

English summary
Instagram Reels to Show Advertisements in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X