Home
Apps

இன்ஸ்டாகிராம் செயலியில புத்தம் புதிய வசதி அறிமுகம்.!

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி பொறுத்தவரை பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும்.

By Prakash S

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்த செயலியை நாடு முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்த்கது. தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் செயலியில புத்தம் புதிய வசதி அறிமுகம்.!

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி பொறுத்தவரை பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். குறிப்பாக ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். மேலும் அதன்படி செய்தால் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் எளிமையாக தெரியும்.

இன்ஸ்டாகிராம் செயலியில புத்தம் புதிய வசதி அறிமுகம்.!

இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வசதி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே செயல்படுகிறது, விரைவில் ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த இனஸ்டாகிராம் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் பல்வேறு மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

இன்ஸ்டாகிராம் செயலியில புத்தம் புதிய வசதி அறிமுகம்.!

விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மியூட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் தேவை இல்லை என்றால் அவர்களை மிக எளிமையாக மியூட் செய்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது. அடுத்து ரியாக்ஷன்ஸ் (reactions)எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் சிற்பம்சம் என்னவென்றால் பல்வேறு ஸ்டோரிகளுக்கு எமோஜிக்கள் மூலம் ரியாக்ஷன்ஸ் கொடுக்க முடியும்.

இன்ஸ்டாகிராம் செயலியில புத்தம் புதிய வசதி அறிமுகம்.!

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் slow-mo எனும் வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு நாட்காட்டி அடிப்படையில் ஸ்டோரிகளை பார்க்ககூடிய வசதியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram Now Letting Users Share Feed Posts to Stories; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X