இனி இன்ஸ்டாகிராமில் ஜிப்(GIF) படங்களை அனுப்பலாம்! எப்படி?

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் உள்ள சமீபத்திய வெர்சன் இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் அம்சத்தில் இன்று முதல் ஜிப் வசதி கிடைக்கிறது.

|

புகைப்படங்களை பகிர பயன்படும் செயலியான இன்ஸ்டாகிராம், தனது 'டைரக்ட்'(Direct) தளத்தில் ஜிப் எனப்படும் கிராபிக்ஸ் படங்களை(Graphics Interchange Format -GIP) அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியில் மெசென்ஞர் சேவை வழங்கும் இந்த இன்ஸ்டாகிராம் டைரக்ட் -ஐ பயன்படுத்தி, பயனர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளலாம்.

இனி இன்ஸ்டாகிராமில் ஜிப்(GIF) படங்களை அனுப்பலாம்! எப்படி?

ஜிப்பி(Giphy) எனும் இணைய தரவுதளம் மற்றும் தேடுபொறி நிறுவனம் வழங்கும் இந்த ஜிப் சேவை, பயனர்கள் ஜிப் படங்களை தேடிப்பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதே வசதி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் உள்ள சமீபத்திய வெர்சன் இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் அம்சத்தில் இன்று முதல் ஜிப் வசதி கிடைக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் டைரக்ட் மெசேஜாக ஜிப் படத்தை எப்படி அனுப்புவது என தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா? இதோ பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள்.

இனி இன்ஸ்டாகிராமில் ஜிப்(GIF) படங்களை அனுப்பலாம்! எப்படி?

படி#1: இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து, மேல் வலது மூலையில் உள்ள டைரக்ட் ஐகானை கிளிக் செய்யவும்.

படி#2 மெசேஜ் அனுப்ப விரும்பும் நபர் அல்லது குழுவின் பெயரை கிளிக் செய்து, உரையாடல் பெட்டியை திறக்கவும்.

படி#3
திரையின் அடிப்பகுதியில் உள்ள மெசேஜ்பாக்ஸ்-ல் ஜிப் வசதியை காணமுடியும்

படி#4
அதில் உங்களுக்கு விருப்பமான ஜிப் படத்தை தேர்ந்தெடுக்கலாம். பரிந்துரைக்கப்படும் ஜிப் படங்களை காண இடது ஸ்வைப் செய்யவும்.

படி#5
ஜிப் படங்களை தேடியவுடன் 'ரேண்டாம்'என தேர்வை காண முடியும்.அதன் மூலம் உங்கள் தேடலுக்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு ஜிப் அனுப்பப்படும்.

இனி இன்ஸ்டாகிராமில் ஜிப்(GIF) படங்களை அனுப்பலாம்! எப்படி?

இந்த புதிய வசதியை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பதிவுகளிலும் ஜிப் கமெண்ட் செய்யும் வசதி விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இந்த வசதி பேஸ்புக்கில் ஏற்கனவே உள்ளது. ஜூன் 2017ல் இந்த வசதி சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கணிணி மற்றும் மொபைலிலும் இவ்வசதியை பயன்படுத்தும் வகையில் ஜிப் பட்டன் கமெண்ட் பாக்ஸ்க்கு அருகில் இருப்பதை காணமுடியும். ஜிப் பார்மேட்டை அறிமுகப்படுத்தி 30வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக புதிய ஜிப் பட்டன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி இன்ஸ்டாகிராமில் ஜிப்(GIF) படங்களை அனுப்பலாம்! எப்படி?

இன்ஸ்டாகிராமில் எமோஜி குறுக்குவழி
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்த பின்னர், எளிதில் எமோஜிக்களை கமெண்ட் செய்யும் வகையில், எமோஜிக்கள் உள்ள சார்ட்கட் பாரை பார்க்கமுடியும். பயனர்கள் கமெண்ட் பாக்ஸை திறந்தவுடன் கீபோர்டுடன் இந்த சார்ட்கட் பாரையும் பார்க்கமுடியும். ஆனால் சமீபத்தில் பயன்படுத்தி எமோஜிக்களில் அதிகபட்சமாக 8 எமோஜிகளை மட்டுமே காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற எமோஜிக்களை பயன்படுத்த, எமோஜி ஐகானை அழுத்திபிடித்தால், அனைத்தையும் பார்க்கலாம்.
Best Mobiles in India

English summary
Instagram now lets you send GIFs Heres how to do it: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X