இன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!
குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியில் செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த அம்சம் என்னவென்றால் இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் வசதியைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு இந்த புதிய வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பப்ளின் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு
இந்த இரண்டு அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் ஆண்ட்ராய்டு பயன்களுக்கு இனிமேல் படிப்படியாக வழங்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாளோவர்களை நீக்கும் போது
விரைவில் இந்த புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறதுஇ எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது எனக் கூறப்படுகிறது.

செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள்
குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலியில் செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடாப்டிவ் ஐகான்
இதற்குமுன்பு அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்துள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அடாப்டிவ் ஐகான் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களது சாதனங்களுக்கு தகுந்தபடி ஐகான் வடிவம் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இதற்கு முன்பு இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.

புதிய வசதி
புதிய வசதி ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ளது புதிய வசதி ஒவ்வொரு சாதனத்திற்கு தகுந்தபடி இன்டா ஐகான் வடிவம் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications