விரைவில்: இன்ஸ்டாகிராமில் வரும் புத்தம் புதிய வசதிகள்.!

விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அப்டேட் வந்த வண்ணம் உள்ளது, மேலும் தற்சமயம் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வசதிகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்: இன்ஸ்டாகிராமில் வரும் புத்தம் புதிய வசதிகள்.!

குறிப்பாக இன்ஸ்டாகிராம் சேவையை மாதம் தோறும் 800 மில்லியன் வாடிக்கையாளர் பயன்படுத்துவதுடன், நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த இனஸ்டாகிராம் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும் என்பதால் பல்வேறு மக்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்.

விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியூட் எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மியூட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனைப் பயன்படுத்தி ஸ்டோரி ஒன்றிற்கு சிலரின் கருத்துக்கள் தேவை இல்லை என்றால் அவர்களை மிக எளிமையாக மியூட் செய்துவிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது. அடுத்து ரியாக்ஷன்ஸ் (reactions)எனும் புதிய வசதி கொண்டுவரப்படும் என இன்ஸ்டாகிராம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் சிற்பம்சம் என்னவென்றால் பல்வேறு ஸ்டோரிகளுக்கு எமோஜிக்கள் மூலம் ரியாக்ஷன்ஸ் கொடுக்க முடியும்.

விரைவில்: இன்ஸ்டாகிராமில் வரும் புத்தம் புதிய வசதிகள்.!

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் slow-mo எனும் வசதி கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. பின்பு நாட்காட்டி அடிப்படையில் ஸ்டோரிகளை பார்க்ககூடிய வசதியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமின்றி சிறிய அளவிலான வீடியோ மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்ளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

தற்சமயம் வெளிவந்துள்ள FastSave for Instagram எனும் அப்ளிக்கேஷனைக் கொண்டு இனஸ்டாகிராம் வீடியோ, புகைப்படம் மற்றும் கோப்புகளை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.

விரைவில்: இன்ஸ்டாகிராமில் வரும் புத்தம் புதிய வசதிகள்.!

முதலில் FastSave for Instagram அப்ளிக்கேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு உங்கள் இனஸ்டாகிராமில் இருக்கும் வீடியோ, புகைப்படம், கோப்புகள் போன்றவற்றின் URL-ஐ அந்த அப்ளிக்கேஷனில் உட்புகுத்தி எளிமையாக டவுண்லோடு செய்துகொள்ள முடியும்.

மேலும் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளிவரும் என்று உறுதி செய்யும் வகையில் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Instagram is testing a feature to let you mute users in your feed; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X