Home
Apps

இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!

கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும், பின்பு இணையவேகம் குறைவான நாடுகளை குறிவைத்து இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் சேர்த்த வண்ணம் உள்ளது பேஸ்புக் நிறவனம், அதன்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியில் சமீபத்தில் மேம்பட்ட கேமரா, யுஐ புதிய ஸ்டிக்கர்கள், ஸ்டோரிகளில் ஷாப்பிங் செய்யும் வசதி என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

 டேட்டா சேவர்

டேட்டா சேவர்

இந்நிலையில் புதிதாக டேட்டா சேவர் அம்சம் ஒன்றை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீ-லோ மற்றும் டவுன்லோடு

பிரீ-லோ மற்றும் டவுன்லோடு

இன்ஸ்டாகிராமின் இந்த புதிய டேட்டா சேவர் அம்சம் பொதுவாக பயனர் தேர்வு செய்யும் வரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரீ-லோ மற்றும் டவுன்லோடு செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பயனர் கிளக் செய்த பின் மட்டுமே அதிக ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் டவுன்லோடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா  சேமிக்கப்படுகிறது

டேட்டா சேமிக்கப்படுகிறது

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் பயனர்கள் பார்க்க விருமபும் மீடியாக்களை அவர்களே தேர்வு செய்யும் வசதியை
அவர்களுக்கு வழங்குகிறது, மேலும் இவ்வாறு செய்யும் போது பயனர் டேட்டாவும் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

இந்த புதிய அம்சத்தை இயக்க இன்ஸ்டாகிராம் செயலியின் செட்டிங்ஸ்-அக்கவுண்ட்-மொபைல் டேட்டா யூஸ்- நெவர், வைபை ஒன்லி, செல்லுலார் 10 வைபை உள்ளிட்ட ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும்.

 இணையவேகம்

இணையவேகம்

கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும், பின்பு இணையவேகம் குறைவான நாடுகளை குறிவைத்து இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Instagram Data-Saving Feature for Android user: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X