Home
Apps

இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் வசதியில் புதிய அம்சம் .!

இன்ஸ்டாகிராம் செயலில் ஷாப்பிங் செய்யும் வகையில், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தற்போது, மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் இந்த புதிய யுக்தி இந்த நிறுவனத்திற்

இன்ஸ்டாகிராம் செயலில் ஷாப்பிங் செய்யும் வகையில், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தற்போது, மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்  ஷாப்பிங் வசதியில் புதிய அம்சம் .!

இன்ஸ்டாகிராம் செயலியின் இந்த புதிய யுக்தி இந்த நிறுவனத்திற்கும் பயனளிக்கும் என்று நம்படுகின்றது. மேலும், ஷாப்பிங்கை எளிமையாக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஷாப்பிங் சேனல்:

ஷாப்பிங் சேனல்:

இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை வழங்கி இன்ஸ்டாவாசிகளுக்கு ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று புது வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.

புதிய அம்சம் உதவுகிறது:

புதிய அம்சம் உதவுகிறது:

அதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண்டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்கின் முழு விவரங்களையும் பார்க்க புதிய அம்சம் வழி செய்கிறது.

 புதிய வசதியும்:

புதிய வசதியும்:

இன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு, பின்னர் அவற்றை பார்க்க முடியும்.
ஸ்டோரி அல்லது பீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

 இன்ஸ்டாகிராம் விளக்கம்:

இன்ஸ்டாகிராம் விளக்கம்:

ஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோ பைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோ பைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

விலையை அறிந்து கொள்ளலாம்:

விலையை அறிந்து கொள்ளலாம்:

இதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. அந்த வகையில் பிஸ்னஸ் ப்ரோபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.

 முழு விபரம் அறியலாம்:

முழு விபரம் அறியலாம்:

நீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை பீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Instagram adds three new shopping features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X