கேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.!
இந்த புதிய வசதியை பயன்படுத்த கேள்விக்கு அருகில் உள்ள பதில் என்ற டேப்பை ஒப்பன் செய்து மிக எளிதாக பதிலை கொடுக்கலாம்.
முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பயனாளிகளின் வசதிகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கதைகள் படிக்கும் வழக்கத்தை அதிகரிக்கவும், நண்பர்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லும் புதிய கேள்வி-பதில் வசதியையும் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல்களில் வெர்ஷன் 52ஐ இன்ஸ்டால் செய்தால் இந்த வசதியை பெறலாம்.

ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்த பின்னர் உங்கள் நண்பர்கள் மற்றும் ஃபாலோயர்களுடன் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ குறித்த கேள்விகளை கேட்டு பதிலை பெறலாம். அதுமட்டுமின்றி இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? நான் இந்த விடுமுறைக்கு எந்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம்? போன்ற கேள்விகளை கேட்டு பதில் பெறலாம்.
அதேபோல் கதைகளையும் அனுப்பியும் பெற்றும் கொள்ளும் வசதியும் உண்டு. இந்த புதிய வசதியை பயன்படுத்த கேள்விக்கு அருகில் உள்ள பதில் என்ற டேப்பை ஒப்பன் செய்து மிக எளிதாக பதிலை கொடுக்கலாம் அல்லது பெறலாம். அதே நேரத்தில் கேள்வி கேட்டவர், பதில் கூறியவர் புகைப்படம் மற்றும் யூசர் நேம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே உள்ள போலிங் ஸ்டிக்கரை விட இந்த கேள்வி-பதிலுகான ஸ்டிக்கர் வித்தியாசமாக உள்ளது. பயனாளிகள் ஏற்கனவே வேறு சிலர் பதிலளித்த கேள்விகள் என்றாலும் அந்த கேள்வியை மீண்டும் செலக்ட் செய்து அதற்குரிய பதிலை கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஸ்னாப்சாட் இந்த கதைகள் குறித்த வசதியை அதன் பயனாளிகளுக்கு அளித்துள்ளது. அதில் ஒரு பத்து வினாடி வீடியோ மூலம் நண்பர்களுக்கு பதில் கிடைக்கும். ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமின் கதைகள் உருவாக்கம் என்பது தானாகவே இருக்கும். அதனை பயனாளிகள் பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவது மட்டுமின்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் 'நண்பர்களுடன் உரையாடல்' என்ற ஸ்டிக்கரின் மூலம் நண்பர்களிடம் கேள்வி கேட்டு பதிலை பெறலாம். கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் தற்போது 40 மில்லியன் பயனாளிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications