Home
Apps

இன்ஸ்டாகிராமில் அநாகரீகமான கமெண்ட்களை பிளாக் செய்யும் புதிய வசதி.!

அநாகரீகமான கமெண்டுகளை ஃபில்டர் செய்தல் மற்றும் ஸ்பேம் ஃபில்டர் ஆகிய இந்த இரண்டு புதிய வசதிகளும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளகளின் மன அழுத்தத்தை குறைக்கும்

By Siva

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றாக விளங்கி வரும் இன்ஸ்டாகிராம் தற்போது இரண்டு புதிய வசதிகளை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதிகளின் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதியே அமைக்கபப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் அநாகரீகமான கமெண்ட்களை பிளாக் செய்யும் புதிய வசதி.!

மனம் வெதும்பும் வகையில் தாக்கி எழுதப்படும் கமெண்டுகளை ஃபில்டர் செய்தல் மற்றும் ஸ்பேம் ஃபில்டர் ஆகிய இந்த இரண்டு புதிய வசதிகளும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் உள்ளது.

இன்ஸ்டார்கிராமில் உள்ள இந்த இரண்டு புதிய வசதிகள் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வழிமுறைகளாகும்." இந்த இரு அம்சங்களும் நம்மை பயமுறுத்தும் கருத்துக்களை நமக்கு தெரியாதவாறு ஃபில்டர் செய்துவிடுவதால் மன அழுத்தமோ டென்ஷனோ ஏற்படாது.

பில்டர் வசதியில் நம்முடைய போஸ்ட்டில் பதிவு செய்யப்படும் தேவையில்ல்லாத கமெட்ண்ட்களை பிளாக் செய்துவிடும். ஆனால் அதே நேரத்தில் மற்ற கமெண்ட்டுகள் வழக்கம் போல் தெரியும். மேலும் கமெண்ட்களை ரிப்போர்ட் செய்யும், டெலிட் செய்யும் , டர்ன் ஆப் செய்யும் பழைய முறையும் தொடரும்

இன்ஸ்டாகிராமில் அநாகரீகமான கமெண்ட்களை பிளாக் செய்யும் புதிய வசதி.!

மேலும் இந்த புதிய வசதி நீங்கள் விரும்பினால் ஆன் செய்து கொள்ளவும், ஆப் செய்து கொள்ளவும் ஆப்சன்கள் உள்ளது. கமெண்ட் செக்சனில் உள்ள செட்டிங் மெனு சென்று இதை ஆன் அல்லது ஆப் செய்து கொள்ளலாம். மேலும் இந்த பில்டர் ஆங்கிலத்தில் வரும் கமெண்ட்டுகளை மட்டுமே தற்போதைக்கு பில்டர் செய்யும், மற்ற மொழி கமெண்ட்டுகளை பில்டர் செய்யும் வசதி வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும்

ஸ்பேம் ஃபில்டர்:

ஸ்பேம் ஃபில்டர் என்னும் இந்த புதிய வசதி லைவ் வீடியோவின் போதும், மற்ற ஸ்டேட்டஸ்களிலும் வரும் அநாகரீகமான கமெண்டுகளை பில்டர் செய்துவிடும் என்பதால் நம்முடைய டென்ஷன் பெருமளவு குறைகிறது. மேலும் இந்த பில்டர் ஒன்பது மொழிகளின் கமெண்ட்டுகளை பில்டர் செய்யும் திறன் உண்டு.

ஆங்கிலம், ஸ்பேனிஷ், போர்த்துகீசிய மொழி, அராபிக், பிரென்ச், ஜெர்மன், ரஷ்யன், ஜப்பானீஷ் மற்றும் சைனீஸ் ஆகிய மொழி கமெண்ட்களை இந்த ஸ்பேம் பில்டர் நம்மை பாதுகாக்கும்.

மேலும் மேற்கண்ட இரண்டு பில்டர் வசதிகளுமே மிஷினால் செயல்படுவது என்பதால் பிழை ஏற்படாது என்பதற்கு உறுதியளிக்க முடியாது. எனினும் இந்த வசதி நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு மிகத்துல்லியமாக செயல்பட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் இந்த வசதியை இந்திய மொழிகள் உள்பட மேலும் சில மொழிகளுக்கு கொண்டு வரவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Instagram has just added two new features to help keep the platform a safe place for self-expression.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X