போன்பே செயலியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த மேட்டரை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
இந்தியா முழுவதும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை?
குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் இந்த கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் அவ்வப்போது பயனர்களுக்கு சில சலுகைகளைக் கூட வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போன் பே செயலி ஆனது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது போன்பே செயலியில் உள்ள யு.பி.ஐ ஐடி (UPI) பயன்படுத்தி வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகளில் மட்டும்..
தற்போது வெளிவந்த தகவலின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், மொரீஷியஸ்,பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய சில நாடுகளில் பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக NIPL (NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்) நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் பே இணை நிறுவனர்?
அதேபோல் எதிர்காலத்தின் மேலும் பல்வேறு நாடுகளில் UPI இன்டர்நேஷனல்(UPI International)அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது போன்பே நிறுவனம். பின்பு இதுகுறித்து போன் பே இணை நிறுவனர் ராகுல் சாரி கூறுகையில், UPI இன்டர்நேஷனல் என்பது உலகின் பிற பகுதிகளுக்கும் UPI அனுபவத்தை வழங்குவதற்கான முதல் முக்கிய படியாக உள்ளது என்றும், இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறினார்

குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள கடைகளில் போன் பே மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறினார். அதேபோல் வரும்காலங்களில் பல நாடுகளில் இந்த புதிய வசதியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த புதிய மாற்றத்தை முன்னெடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என ராகுல் சாரி கூறியுள்ளார்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த புதிய வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் UPI இன்டர்நேஷனல் செயலியில் தங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். அதன்பின்பு வாடிக்கையாளர்கள் தங்கள் UPI பின்னை செலுத்தி பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதில் வாடிக்கையாளர்கள் இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, பணத்தைப் பெறும் வெளிநாட்டு வணிகர்களுக்கு உள்ளூர் நாணய மதிப்பில் பணம் செலுத்தப்படும்.
தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டு சாதனங்களிலும் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு இந்த போன் பே செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த செயலியைப் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போன் பே செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூகுள் பே, போன்பே செயலிகளை விட தனித்துவமான வசதியை வழங்குகிறது இந்த போன் பே செயலி. எனவே தான் இந்தியாவில் இந்த போன் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








