நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்க புதிய ஆப் அறிமுகம்.! மத்திய அரசு.! முழுவிவரம்.!

|

இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் நமது வேலையை மிகவும் எளிதாக மாற்றி விடுகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக அலுவலகம் முதல் வங்கி வரை அனைத்திற்கு இந்த ஆப் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

மொபைல் ஆப் (pm svanidhi app) ஒன்றை மத்திய அரசு

இந்நிலையில் நகர்புறங்களில் நடைபாதை வியாபாரிகள் ரூ.10,000 கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க பிரத்யேகமான மொபைல் ஆப் (pm svanidhi app) ஒன்றை மத்திய அரசு துவங்கி உள்ளது.

ஏற்படுத்திய கொரோனா

மிகவும் துன்பத்தை ஏற்படுத்திய கொரோனா மற்றும் அதனால் போடப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபராம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் 10மடங்கு கூடுதல் நன்மை அறிவிப்பு.! எந்த திட்டம் தெரியுமா?

உதவும் வகையில் பிரதமரின்

எனவே இவர்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10000 கடன் உதவியை வழங்குகிறது. மேலும் இந்த கடன் தொகையை மாத தவணையாக ஒராண்டுக்குள் திரும்பி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தனியாக மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான முடிவு: வேலை தேடுபவரா நீங்கள்- கூகுள் அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்!

வீட்டுவசதி மற்றும்

குறிப்பாக இந்த தகவலை வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின்பு நகர்புறங்களில் இருக்கும் நடைபாதை வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பங்கள் பெறும் வகையில் புதிய செயலியை (ஆப்) (pm svanidhi app )மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.

விலை இதுவா இருந்தா வரவேற்பு அமோகமா இருக்கும்: ரெட்மி 9 டீசர்!

ஜூலை மாதம் 2-ம் தேதி

கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி இந்த கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதுவரை 5.68லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பின்பு 1.3லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர் எனத் தகவல் வெளிவந்தள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indian Government Launches PM SVANidhi Mobile App for Street Vendors: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X