Corona Kavach App: கொரோனா வைரஸ்: இந்தய அரசு அறிமுகம் செய்துள்ள செயலி.! எதற்கு?

|

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா கவாச்

கொரோனா கவாச்

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு செயலியை வெளியிட்டுள்ளது, இது நாட்டில் நோய் பரவாமல் தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா கவாச் என்று அழைக்கப்படும் இந்த செயலி நோயாளிகளை மட்டுமல்லாமல், அவர்களுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மற்றவர்களையும் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பீட்டா

இந்த செயலியின் புதிய பீட்டா பதிப்பு தற்போது ஆண்ட்ராய் இயங்குதளத்தில் பதிவிறக்குவதற்கு கிடைக்கிறது, பின்பு ஐஒஎஸ் இயஙகுதளத்தில் இந்த செயலி செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.! என்ன தெரியுமா?கொரோனா வைரஸ்: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சிறப்பு சேவை.! என்ன தெரியுமா?

 சுகாதார அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

அதாவது MeitY மற்றும் சுகாதார அமைச்சகம், கொரோனா கவாச் அல்லது கொரோனா ஷீல்ட் இணைந்து உருவாக்கியது, எந்தவொரு பயனுரும் பார்வையிட்ட சமீபத்திய இடங்களை பட்டியலிட ஜிபிஎஸ் கண்காணிப்பை பயன்படுத்தும்.

மஞ்சள் நிறம்

மஞ்சள் நிறம்

மேலும் அந்த இடங்களில் ஏதேனும் அறியப்பட்ட நேர்மறையான நிகழ்வுகளின் இருப்பிடத் தரவுகளுடன் பொருந்தினால், அதுஒரு எச்சரிக்கையை தூண்டும், பயனர்களின் உடல்நிலையை நிறங்களின் அடிப்படையில் செயலி கூறுகிறது. பச்சை அனைத்தும் நலம் என்பதை குறிக்கிறது, பிரவுன் பயனர் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மஞ்சள் நிறம் அவர்கள் உடனடியாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், சிவப்பு COVID-19 இருப்பதைக் குறிக்கிறது.

களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி!களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி!

ஆஃப்லைனில் இருக்கும் என்று கூறப்படுகிறது

ஆனால் இந்த செயலியின் தனியுரிமை கொள்கைகள் முற்றும் தெளிவாக இல்லை, சாத்தியமான சுகாதார ஆபத்து இல்லாவிட்டால், பயனரின் இருப்பிடத் தரவு ஆஃப்லைனில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எந்தவொரு தகவலையும் பெறுவதற்கு முன்பு பயனர்கள் முதலில் தங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்டு செயலியில் உள்நுழைய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

SARS-CoV-2 க்கு வெளிப்படும்

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இந்த செயலியன் நோக்கம் SARS-CoV-2 க்கு வெளிப்படும் நபர்களைக் கண்காணிப்பதே ஆகும், கொரோனா பற்றிய கூடுதல் தகவல்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Best Mobiles in India

English summary
Indian Government Launches Corona Kavach App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X