வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்தியாவின் புதிய Sandes ஆப்.. வாட்ஸ்அப்பை விட ஒரு படி முன்னேற்றம்..

|

இந்தியத் தேசிய தகவல் மையம் (IMC) வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக டப்பிங் செய்யப்பட்ட இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான 'சன்டேஸ் (sandes)' பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​மாநில மற்றும் மைய அதிகாரிகள் பாதுகாப்பான சூழலில் தொடர்புகொள்வதற்கு 'கவர்மெண்ட் இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் சிஸ்டம்' (GIMS) என்ற பயன்பாட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இனி இவர்கள் 'சன்டேஸ்' பயன்பாட்டை பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப் போன்ற 'சன்டேஸ் பயன்பாடு

வாட்ஸ்அப் போன்ற 'சன்டேஸ் பயன்பாடு

இது இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பிற நபர்களுக்கும், இந்திய மக்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் போன்று இதில் பயனர்கள் புதிய கணக்கை ஓபன் செய்ய பயனர்கள் தங்கள் 'தொலைப்பேசி எண்' அல்லது 'மின்னஞ்சல் ஐடியை' வழங்க வேண்டும். 'சன்டேஸ்' பயனர்கள் தனிப்பட்ட செய்திகளை அனுப்பவும், புதிய குரூப்களை உருவாக்கவும் இது பயனர்களை அனுமதிக்கிறது.

சன்டேஸ் ஆப்ஸை எப்படி டவுன்லோட் செய்வது?

சன்டேஸ் ஆப்ஸை எப்படி டவுன்லோட் செய்வது?

நல்ல விஷயம் என்னவென்றால், இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு வெர்ஷன் 5.0 அல்லது அதற்கு மேல் இருக்கும் சாதனங்களில் இதை பயன்படுத்தலாம். மேலும் iOS சாதனங்களுக்கு இது iOS 12 அல்லது அதற்கு மேல் இருக்கும் பயனர்கள் இதை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கிம்ஸ் போர்டல் மூலம் APK பைல் மூலம் டவுன்லோட் செய்யலாம்.

யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!யாரும் சொல்லிக்கொடுக்காத 10 ஸ்மார்ட்போன் தந்திரங்கள்! இப்போதே ட்ரை செய்யுங்கள்!

ஆறு இலக்க OTP

ஆறு இலக்க OTP

புதிய சன்டேஸ் பயன்பாடு இப்போது கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) இல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், பயனர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் கணக்கைப் பதிவுபெற வேண்டும், அதன் மூலம் இந்த செயல்முறையை அங்கீகரிக்க ஆறு இலக்க OTP உங்களுக்கு அனுப்பப்படும்.

வாட்ஸ்அப் போன்ற பல அம்சங்கள்

வாட்ஸ்அப் போன்ற பல அம்சங்கள்

'சன்டேஸ்' பயன்பாட்டில் வாட்ஸ்அப்பைப் போன்ற பல அம்சங்கள் உள்ளன. ஆனால், பல பயனர்கள் பாராட்டும் ஒரு அம்சம், 'மின்னஞ்சல் ஐடி' உடன் பதிவுபெறுவதற்கான விருப்பம் தான். வாட்ஸ்அப்பைப் போல இதில் பயனர்களின் 'மொபைல் எண்கள்' கட்டாயமாக்கப்படவில்லை. சன்டேஸ் பயன்பாடு உங்களின் சாட் பேக்அப் எடுக்கவும் அனுமதி வழங்குகிறது. குறிப்பாக இதிலும் இது வாட்ஸ்அப் போன்று இல்லாமல் ஒரு படி மேலே முன்னேறியுள்ளது.

WhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? ஈசி டிப்ஸ்..WhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? ஈசி டிப்ஸ்..

சாட் பேக்அப் வசதி

சாட் பேக்அப் வசதி

காரணம், கூகிள் டிரைவ் (ஆண்ட்ராய்டு) அல்லது ஐக்ளவுட் (ஆப்பிள்) ஆகியவற்றில் பேக்அப் எடுக்க உங்களை அனுமதிக்கும் வாட்ஸ்அப்பைப் போலன்றி, சன்டேஸ் உங்களுக்கு மின்னஞ்சல் ஐடி வழியில் சாட் பேக்அப் வசதியை வழங்குகிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தொலைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் பதிவுசெய்த பிறகு பயனரால் அதை மாற்ற முடியாது என்பது மட்டுமே சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian Government Launches Alternative Sandes App To WhatsApp Is Here For Download : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X