Home
Apps

இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஆப்.. இப்பொழுது பிளே ஸ்டோரில்..

பிரதமர் மோடியின் 'ஆத்மனிர்பர் பாரத் மிஷன்' க்கு இணங்க, இந்திய ராணுவம் பாதுகாப்பான வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாட்டை "செக்யூர் அப்ளிகேஷன் ஃபார் இன்டர்நெட் அல்லது சாயி (Secure Application for the Internet or SAI) என்று இந்திய ராணுவம் பெயரிட்டுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவ வீரர்கள் ஒரு பாதுகாப்பான மெசேஜிங் சேவையை வழங்கும் நோக்கத்தில் இந்திய ராணுவம் இந்த சாயி பயன்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பயன்பாடு இப்பொழுது அண்ட்ராய்டு மேடையில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் iOS தளத்திலும் இந்த பயன்பாடு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான எண்டு-டு-எண்டு பாதுகாப்புடன் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு சேவைகளுக்கான மெசேஜிங் அனுபவத்தை இது வழங்குகிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கு எந்தவொரு முக்கியமான தகவலும் கசிவதைத் தடுக்க இந்த பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சி.இ.ஆர்.டி-இன் எம்பனேல்ட் ஆடிட்டர்

இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மெசேஜிங் பயன்பாட்டை சி.இ.ஆர்.டி-இன் எம்பனேல்ட் ஆடிட்டர் மற்றும் ஆர்மி சைபர் குழுமம் ஆய்வு செய்துள்ளது, மேலும் என்.ஐ.சியில் உள்கட்டமைப்பை வழங்கும் அறிவுசார் சொத்துரிமை (ஐபிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்முறை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்வாட்

"இந்த மாடல் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மெசேஜிங் பயன்பாடுகளான வாட்ஸ்அப், டெலிகிராம், சாம்வாட் (SAMVAD) மற்றும் ஜிம்ஸ் (GIMS) போன்றது மற்றும் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் மெசேஜிங் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. லோக்கல் சர்வர் மற்றும் என்கிரிப்ஷன் பாதுகாப்பு அம்சங்களை SAI கொண்டுள்ளது என்று அமைச்சகம் தனது வெளியீட்டில் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Indian Army launches SAI messaging app, similar to WhatsApp and Telegram : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X