குரூப் மெசேஜ் முறையில் மாற்றம் கொண்டு வர இந்தியர்கள் வலியுறுத்தல்.!

"இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் ஆகும், ஏனென்றால் பயனர்கள் ஒருவரையொருவர் ஆக்கிரோஷமாக விரும்பாத எண்ணங்களை வெளிப்படுத்தும் நபர்களாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

By GizBot Bureau
|

இண்டர்நெட்டில் மெசேஜிங் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் உள்பட பல சமூக இணையதளங்கள் தங்களுடைய குரூப் சேட்களில் ஒருசிலர் தேவையில்லாத சிலரை இணைப்பதாகவும், அதேபோல் தங்களுக்கு தெரியாமலேயே ஒரு குரூப்பில் தங்களை இணைத்துவிடுவதாகவும், இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

குரூப் மெசேஜ் முறையில் மாற்றம் கொண்டு வர இந்தியர்கள் வலியுறுத்தல்.!

இதுகுறித்து குரூப் சேட் செய்பவர்கள் டெலிகிராம் சி.இ.ஓ பவர் டுருவ், ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் இவர்கள் போன்றவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஒரு குரூப்பில் உள்ளவரகள் மற்றவரகளின் சம்மதம் இல்லாமல் அந்த குரூப்பில் இணைப்பதால் குருப்பில் உள்ளவரகளின் போன் நம்பர், பெர்சனல் விபரங்கள் மற்றும் புரபைல் படங்கள் ஆகியவை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

"பங்கேற்க விரும்பாத குழுவிற்கு தங்களைத் தடுக்க ஒரு முறையான நடவடிக்கை இல்லாத நிலையில், பயனர்கள் அந்த குழுக்களில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து மென்பொருள் சுதந்திர சட்டம் மையம் மற்றும் சில அமைப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

"இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் ஆகும், ஏனென்றால் பயனர்கள் ஒருவரையொருவர் ஆக்கிரோஷமாக விரும்பாத எண்ணங்களை வெளிப்படுத்தும் நபர்களாக வெளிப்படுத்தியிருக்கலாம். இந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் பயமுறுத்துவது, வெறுப்பை வெளிப்படுத்துவது, துன்புறுத்தல் அல்லது எந்த விதத்திலும் தனிநபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படலாம்.

தீங்கிழைக்கும் ஒருசிலர் இந்த அம்சத்தை மிகவும் தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர், குறிப்பாக பெரிய அளவிலான தொந்தரவுக்கு உட்படுத்தும் வகையில் ட்ரோல் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நபர் மீதான தனிநபர் தாக்குதல் தொடர வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நபர்களை தடுப்பதன் மூலம் அவரக்ளுடைய செயல்திறனை குரூப் சேட்டில் முடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தடுப்பதன் மூலம் நம்முடைய பெர்சனல் டேட்டாக்கள் வெளியே சென்று தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுவதையும் நம்மால் தவிர்க்க முடியும்.

குரூப் மெசேஜ் முறையில் மாற்றம் கொண்டு வர இந்தியர்கள் வலியுறுத்தல்.!

எனவே இந்த முக்கிய கடிதத்தில் உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்கள் கையெழுத்து மற்றும் பெயர்களை குறிப்பிட்டு மெசேஜிங் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் மெசேஜிக் சர்வீஸ் செய்பவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க நாம் இந்த கடிதத்தின் மூலம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Best Mobiles in India

English summary
Indian Activists Ask Messaging Apps to Amend Group Chat Feature to Prevent Unwanted Invites : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X