கூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.!
முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் இந்த அம்சம், மோட்டார்சைக்கிள் பயன்படுத்துவோருக்கு நாடு முழுக்க இருசக்கர வாகனம் மூலம் செல்ல தலைசிறந்த வழிகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
கூகுள் மேப்ஸ் செயலியில் டூ-வீலர் மோட் இந்தியாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. தற்சமயம் இந்த அம்சம் ஹாங் காங், இந்தோனேஷியா, மலேசிா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் இந்த அம்சம், மோட்டார்சைக்கிள் பயன்படுத்துவோருக்கு நாடு முழுக்க இருசக்கர வாகனம் மூலம் செல்ல தலைசிறந்த வழிகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இதுபோன்ற நாடுகளில் உண்மையான பெயர்கள் அல்லாத தெருக்கள் மற்றும் சாலைகள் இருக்கும் என்பதால் இந்த திட்டம் மூலம் பயனர்கள் முதலில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை படித்து, நினைவில் பதிந்து கொண்டு பின் பயணத்தை தொடரச் செய்வது என கூகுள் மேப்ஸ் தலைவர் க்ரிஷ் விட்டல்தேவரா தெரிவித்தார்.

தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள், ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்றும் மேற்கத்திய சந்தைகளில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூகுள் மேப்ஸ் சேவையில் இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோருக்கெனபிரத்யேக அம்சம் சேர்க்கப்பட்டது. புதிய டிராவல் மோட் இனி டிரைவ், டிரெயின் அல்லது பஸ், வாக் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் சேவையில் டூ-வீலர் மோட் அம்சம் வழங்கப்பட்ட முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இருசக்கர வாகன சந்தையை பொருத்த வரை உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா மிகப் பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. பல லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்படும் நிலையில், போக்குவரத்துக்கு பயனர்கள் வெவ்வேறு நேவிகேஷன் தேவைகளை வைத்திருக்கின்றனர் என கூகுளின் நெக்ஸ்ட் பில்லியன் பயனர் குழு துணை தலைவர் சீசர் சென்குப்தா தெரிவித்தார்.

மேப்ஸ் செயலியில் உள்ள டூ-வீலர் மோட், கார் மற்றும் டிரக் போன்றவை செல்ல முடியாத இடங்களை ஷார்ட்கட் என்ற பெயரில் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications