Home
Apps

வைரலாகும் இமேஜ்நெட் செயலி! செல்ஃபியை வைத்து உங்களைப் பற்றி சொல்லும்...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்ஃபிக்களை 'நேர்மையாக' வகைப்படுத்துவதாக கூறும் வைரல் செயலி ஒன்று, மோசமான மற்றும் இனவெறி பட்டங்களை வழங்கி வருகிறது.

ஆத்திரமடைந்த பயனர்கள்

ஆத்திரமடைந்த பயனர்கள்

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, 'நீக்ரோ', 'சாய்ந்த கண்' மற்றும் 'கற்பளிப்பு சந்தேகநபர்' போன்ற தாக்கமேற்படுத்தக்கூடிய மற்றும் இனவெறி சொற்களை தங்கள் படங்களுக்கு வழங்கியுள்ளதாக ஆத்திரமடைந்த பயனர்கள் கூறுகின்றனர்.

மெசின் லேர்னிங் தொழில்நுட்பம்

மெசின் லேர்னிங் தொழில்நுட்பம்

இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துவது தான் தங்களது சரியாகவே நோக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்த செயலியின் வடிவமைப்பாளர்கள், பல வகையான உள்ளமைக்கப்பட்ட மெசின் லேர்னிங் தொழில்நுட்பம் மூலம் பாரபட்சம் மற்றும் பாகுபாடு குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவது தான் இதன் நோக்கமாக இருந்தது என்றும் கூறுகின்றனர்.

அதிர்ச்சியில் உள்ளனர்

அதிர்ச்சியில் உள்ளனர்

ஆனால் பல பயனர்கள் தங்களது புகைப்படங்கள் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தில் அறியாமல் முக்கியப் பங்கைக் கொண்டுள்ளன என்று இன்னும் ஆத்திரத்தில் உள்ளனர்.பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த செயலியை பயன்படுத்தி தனது செல்பியை பதிவேற்றியபோது 'கற்பழிப்பு சந்தேக நபர்' என்று செயலியால் விமர்சிக்கப்பட்டார். பிற பயனர்களும் தங்கள் புகைபடங்கள் பல்வேறு இனவெறி தூண்டுதல்களுடன் விமர்சிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர்.

புத்தியில்லாத ஒருதலைபட்சமான மற்றும் பாரபட்சமானவை

புத்தியில்லாத ஒருதலைபட்சமான மற்றும் பாரபட்சமானவை

மில்லியன்கணக்கான புகைப்படங்களுடன் பயிற்சியளிக்கப்பட்ட இந்த இமேஜ்நெட் செயலி, மக்களின் படங்களை வகைப்படுத்த ஒரு நரம்பியல் வலையமைப்பைப் பயன்படுத்துகிறது.


மெசின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல உள்ளார்ந்த சிக்கல்கள் என்னவென்றால், அவை கவனக்குறைவானவை, வேதனை ஆக்குபவை, புத்தியில்லாத ஒருதலைபட்சமான மற்றும் பாரபட்சமானவை . பெரும்பாலும் இது பயிற்சியளிக்கப்பட்ட விதத்தில் பன்முகத்தன்மை இல்லாததால் உருவாகிறது.

நாங்கள் வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறோம்

நாங்கள் வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறோம்

இது குறித்து இணையதளத்தில் கூறுகையில்: 'இமேஜ்நெட் பல சிக்கலான, தாக்கமேற்படுத்தக்கூடிய மற்றும் வினோதமான வகைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வேர்ட்நெட்டிலிருந்து எடுக்கப்பட்டது. சிலர் தவறான கருத்து அல்லது இனவெறி சொற்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே, இமேஜ்நெட்-ம் அந்த வகைகளுக்கு ஏற்ப விடையளிக்கிறது. இதன் வடிவமைப்பே இப்படிதான். சிக்கலான பயிற்சி தரவுகளில் தொழில்நுட்ப அமைப்புகள் பயிற்சியளிக்கப்படும்போது என்ன நடக்கிறது என்பதை நாங்கள் வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறோம். மக்களின் செயற்கை நுண்ணறிவு வகைப்பாடுகள் வகைப்படுத்தப்படும் மக்களுக்கு அரிதாகவே தெரிக்கப்படுகின்றன. இமேஜ்நெட் அந்த செயல்முறையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. மேலும் இந்த விஷயங்கள் தவறாக நடக்கக்கூடிய வழிகளையும் காண்பிக்கிறது."

 இனவெறி செயலி

இனவெறி செயலி

இது வெளிப்படுத்தும் ஒருதலைபட்சமான முடிவுகளை தவிர்க்கும் வகையில்,மெசின் லேர்னிங் முறையைப் பயிற்றுவிக்கும் போது சரியான தரவைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தைக் காண்பிப்பதற்காக தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.


இவ்வாறு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டாலும், இமேஜ்நெட் செயலியின் மீது டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது ஆத்திரத்தை கொட்டி வருவதுடன், இனவெறி செயலி என்று வசைபாடிவருகின்றனர்.

Best Mobiles in India

English summary
ImageNet app: Selfie will tell you about yourself : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X