செல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.!

|

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்தில் மட்டும் 120 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகிலேயே செல்பி இறப்பில் இது அதிக எண்ணிக்கை ஆகும். ஓடும் ரயில், கார், ஆகியவற்றில் செல்பி எடுக்கும்போது உயரமான மலை மற்றும் கட்டிடங்களில் இருந்து செல்பி எடுக்கும்போது மரணம் அடைந்தவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு புள்ளி விபரம். ஒரிஸ்ஸாவில் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்கும்போது, ஒரு இளைஞர் யானையுடன் செல்பி எடுக்கும்போது விலங்கினங்கள் தாக்கியதால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மீன் தொட்டி அருகே செல்பி எடுக்கும்போது மரணம் அடைந்துள்ளனர்.

செல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.!

2017ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கொல்கத்தாவில் நான்கு பேர் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது செல்பி எடுத்ததால் உயிரிழந்தனர். இதுபோன்ற செல்பி மரணத்தை தவிர்க்க அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற ஐஐடி ஒரு செயலியை கண்டுபிடித்துள்ள்னர். இந்த செயலி நீங்கள் ஆபத்தான இடத்தில் இருந்து செல்பி எடுக்கும்போது உங்களுக்கு நேரும் ஆபத்தினை புரிந்து கொள்ளும் வகையில் உங்களை அலர்ட் செய்யும். இந்த செயலியை அபிநவ் தால் என்ற உதவி பேராசிரியரும் அவருடைய மாணவர்கள் ஜிதேந்தர்சிங் மற்றும் ஹர்ஷ் வர்தான் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இந்த செயலிக்கு 'கருடா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

செல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.!

இந்த செயலியில் உலகில் உள்ள சுமார் 11 ஆயிரம் ஆபத்தான மற்றும் அச்சமுறுத்தும் இடங்களில் இமேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் இருந்து செல்பி எடுக்க முயற்சி செய்யும்போது இந்த செயலி உடனே செயல்பட்டு அந்த ஆபத்தை நீங்கள் உணரும் வகையில் அலர்ட் செய்யும். உதாரணத்திற்கு நீங்கள் செல்பி எடுக்கும்போது உங்கள் பின்னால் வாகனங்கள் வந்தாலோ, உயரமான ஆபத்தான இடத்தில் நீங்கள் இருந்தாலோ உடனே அலர்ட் கிடைக்கும்.

இந்த செயலியை ஐஐடி வளாகம் உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு மாதங்களாக சோதனை செய்தபோது சரியான ரிசல்ட் கொடுத்ததை அடுத்து தற்போது இந்த செயலி நடைமுறைக்கு வரவுள்ளது. பயனாளிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் செயல்படும் இந்த செயலியை இலவசமாகவே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இதே போன்று கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 'சேஃபடி' மற்றும் 'சேஃப்டி கேமிரா ஆகிய செயலிகளை டெல்லியை சேர்ந்த ஐஐடி குழுவினர் ஏற்கனவே பிளே ஸ்டோரில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.!

இருப்பினும் இந்த 'கருடா' செயலி மிக துல்லியமாக ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும்போது அலர்ட் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றும் என்றும் டாக்டர் தால் கூறியுள்ளார்,.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IIT-Ropar develops app to prevent selfie deaths : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X